Krishnasamy contesting from Ottapidaram.. Puthiya Tamil Nadu Party’s first phase candidate list released!
ADMK
சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ திமுக அமைச்சர்கள் நிற்கும் தொகுதிகளை பாஜகவுக்கு அதிமுக கொடுத்துள்ளது.. பாஜக வரக்கூடாது என்று திமுகவினர் பிரச்சாரம் செய்வார்கள்.. எல்லாம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் தான்.. பாஜக மதவாத சக்தி, அது வரக்கூடாது என்று திமுகவினர் பிரச்சாரம் செய்வார்கள்.. பாஜக வரக்கூடாது என்றால் காங்கிரஸ் வரலாமா என்று நாங்கள் கேட்போம்.. […]
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக,, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வேர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் என்.டி.ஏ கூட்டணி தலைவர்கள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினார்.. தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் வருகை தந்து […]
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து என்.டி.ஏ. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.. அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.. இந்த ஆர்ப்பாட்டங்களில் கூட்டணி கட்சியினரும் முன்னாள் அமைச்சர்களும் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். அந்த […]
தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் நடந்து வருகிறது, இது இந்த வருடம் மே 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதே போல் புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ந்தேதியும், அசாம் மாநில சட்டசபை மே 20-ந்தேதியும், மேற்கு வங்காள மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே 7-ந்தேதியும், கேரள சட்டசபை மே 23-ந்தேதியும் முடிவடைகிறது. இதன் காரணமாக அசாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களிலும் […]
விளாத்திக்குளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை – கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்டு உயிரிழந்த அச்சிறுமியின் குரலாக நீதிகேட்டு பாராளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை ஒலித்து வருகிறது அதிமுக. களத்தில் உறவினர்கள் – ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று […]
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. அந்த வகையில் தவெக சார்பில் கடந்த 6-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது.. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை.. ஆனால், தவெக கட்சி என்.டி.ஏ […]
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு […]
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்து வந்த பல தலைவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போயுள்ளனவர்.. அப்படிப்பட்ட தலைவராக ஒருவராக தான் சசிகலா உள்ளார்.. ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தின் முதல்வராகலாம் என்ற எண்ணத்துடன் இருந்த அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார்.. சிறை தண்டனை முடிந்த திரும்பிய சசிகலா தமிழக அரசியல் குறிப்பாக அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அப்படி […]
தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்யக் கூறி அமலாக்கத்துறை சார்பில் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழங்கிய ஆதாராங்களில் முகாந்திரம் உள்ளது என்பதால் அதன் அடிப்படையில் […]

