தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. அரசியல் தலைவர்கள் இப்போதே தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.. இந்த சூழலில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்று கூறி ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது அரசியலில் பெரும் […]

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்றிரவு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.. இதுகுறித்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.. மோப்ப நாய் உதவி உடன் நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே சோதனையின் முடிவில் இது வெறும் புரளி […]

2026-ல் அதிமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணம் குறைக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று குன்னூர் தொகுதியில் பேசிய அவர்; திமுக ஆட்சிக்கு வந்து 52 மாதம் முடிந்தது, இன்னும் 7 மாதமே இருக்கிறது. குன்னூருக்கு ஏதாவது பெரிய திட்டம் வந்திருக்கிறதா..? இதே […]

மதுரை அருகே அரசு மாணவர் விடுதியில் மாணவர் தாக்கப்பட்டதற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ மதுரை செக்கானூரணி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் மாணவர்கள் இடையே தாக்குதல் ஏற்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த மாணவர் விடுதியில் ஆசிரியர் நியமனம் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. அரசு […]

2026-ல் அதிமுக ஆட்சியில் மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் நேற்று ராசிபுரத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி: ஜூலை 7-ம் தேதி நான் எழுச்சிப் பயணம் தொடங்கினேன். இன்று 154-வது தொகுதியாக ராசிபுரத்தில் உங்களை சந்திக்கிறேன். முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியது போன்று, ஒரு மணி நேரம் மக்கள் வெள்ளத்தில் நீந்தி […]

சேலம் மாவட்டம் ஓமலூரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ நான் சுற்றுப்பயணம் சென்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2026 தேர்தல் அதிமுக கூட்டணிக்கு வெற்றி உறுதி என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.. மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர்.. நான் டெல்லி சென்று வந்த பிறகு பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுகின்றன.. திரு ஸ்டாலின் அடிக்கடி […]