அதிமுகவுடன் கூட்டணி சேருவதில் பிரச்னை இல்லை, ஆனால் பாஜக இருப்பதால் அது முடியாது. பாமக, பாஜக இடம்பெறும் அணியில் விசிக இடம்பெறாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்கள் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்; அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அவர்களுடன் நட்பின் அடிப்படையில் சந்திப்பு நிகழ்ந்தது அவ்வளவுதான். அண்மையில் ஒரு நிகழ்வில் நாங்கள் பங்கேற்க கூடிய வாய்ப்பு அமைந்தது. விஐடி உரிமையாளர் வேந்தர் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பங்கேற்றோம். […]

இந்தியாவில் கிரிமினல்களை அதிகமாக சேர்க்கும் கட்சி பாஜக என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார் ‌ சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி; பழனியில் அமைச்சர் சேகர்பாபு முருகன் பக்தர் மாநாடை சிறப்பாக நடத்தி முடித்தார். தமிழகத்தில் ராமா ராமா என்று சொல்லிப் பார்த்தார்கள் அது எடுபடவில்லை. தமிழ் கடவுள் முருகன் பெயரை சொல்லியாவது மாற்று வேடத்தில் வரலாம் என உள்ளே வருகின்றனர் பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் […]

திருவண்ணாமலை மாவட்டத்தில், மூன்று மாதங்களுக்கு முன் மாரடைப்பால் உயிரிழந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் முத்துகிருஷ்ணனுக்கு, எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலர் பதவி வழங்கி அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், வடக்கு, தெற்கு, மத்தியம் என மூன்று பிரிவுகளாக அதிமுக பிரித்துள்ளது. ஆரணி மற்றும் போளுர் தொகுதியில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ பதவியில் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு […]

திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை பொறுப்புகளில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாக சேலத்தைச் சேர்ந்த குழந்தைவேலுவிடம் ரூ.11 லட்சம், அசோக்கிடம் ரூ.5.20 லட்சம் பெற்று அதிமுக ஐடி பிரிவு மாநில நிர்வாகி பிரசோத் என்பவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பிரசாத் மீது நுங்கம்பாக்கம் காவல்துறை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு […]

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் மூதாட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளையும் பாதுகாப்பாக கடப்பதே அக்னிப் பரீட்சையாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மறைந்த சாமியாத்தாள் […]

தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்ய தென் மாவட்ட அளவிலான பாஜக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார். இதை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு […]

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடங்களுக்கான வேட்பு மனுத்தாக்கலுக்காக, தமிழக சட்டப்பேரவை செயலக கூடுதல் […]

மத்திய அரசுக்கு எதிரான திமுகவின் தீர்மானங்கள் அனைத்தும், உண்மையை எதிர்கொள்ள முடியாத ஒருதலைபட்ச அரசியலின் வெளிப்பாடு என பாஜக மாநில தலைவர் நயினார் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தொடர்ந்து மத்திய அரசு நிதி விஷயத்தில் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்ற உண்மையற்ற பிரச்சாரத்தை திமுக வைத்துக் கொண்டே வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டதைப்போல 2014-ம் ஆண்டு முதல் வசூலிக்கப்பட்ட வரியைவிட […]