சேலம் மாவட்டம் மாறமங்கலம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் (32) என்பவரும் நாமக்கல் மாவட்டம் சூளங்காட்டு புத்தூர் கிராமத்தை சேர்ந்த சுமதி (30) என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இதனிடையே சுமதியை திடீரென காணவில்லை. கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவரின் […]

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த உத்தமபாளையம் வட்டமலை அணை அருகேயுள்ள வனப்பகுதியில், கடந்த டிசம்பர் 6ஆம் தேதி, உடல் கருகிய நிலையில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்தவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரன்பட்டி ஏகலனையாம்பாளையம் புதூரைச் சேர்ந்த செல்லத்துரையின் மனைவி வடிவுக்கரசி (45) என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. சம்பவம் […]

தென்காசி பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (25). கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்தவர் கலாசூர்யா (25). இருவரும் மதுரை மாவட்டம் சொரிக்காம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு முன்பே கலாசூர்யாவுக்கு 2 முறை திருமணங்கள் முடிந்திருந்தன. கணவனை விட்டு பிரிந்த நிலையில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு […]