ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி மக்களைக் கொன்ற மூன்று பயங்கரவாதிகள், ஆபரேஷன் மகாதேவ் திட்டத்தின் கீழ் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும், தாக்குதலில் அவர்களின் தொடர்பு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தெரிவித்தார். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட வலுவான, வெற்றிகரமான மற்றும் தீர்க்கமான ஆபரேஷன் சிந்தூர் குறித்த மாநிலங்களவையில் சிறப்பு விவாதத்தில் ஷா இவ்வாறு கூறினார். இதனுடன், […]

பஹல்காம் பயங்கரவாதிகளின் பாகிஸ்தான் தொடர்பு குறித்து கேள்வி எழுப்பிய ப.சிதம்பரத்தை அமித்ஷா கடுமையாக சாடினார். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பதிலடி கொடுத்துள்ளார்.. இன்று மக்களவையில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய அவர், அந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததற்கான […]

பஹல்காம் தாக்குதல் நடத்திய 3 பேரும் ஆபரேஷன் மகாதேவில் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிவித்தார். ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக தொடங்கப்பட்ட ‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதம் நேற்று பிற்பகல் மக்களவையில் தொடங்கியது. விவாதத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இன்று மக்களவையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தில் உள்துறை அமைச்சர் […]

மணிப்பூரில் வன்முறை பதற்றம் நிலவுவதால், அடுத்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதிவரை குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிள்ளது. மணிப்பூரில் மே 2023 முதல் மெய்தி மற்றும் குக்கி-ஜோ சமூகங்களிடையே இனக்கலவரம் நடந்து வருகிறது. இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 13 அன்று பாஜக முதலமைச்சர் பைரன் சிங் ராஜினாமா செய்த பிறகு மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பாராளுமன்ற […]

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியே வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றிபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்; அதிமுக பாஜகவுடன் உறவில் இருந்த நிலையில், இனி பாஜகவுடன் சேர போவதில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்தார். இப்போது மீண்டும் பாஜகவுடன் இணைந்திருக்கிறார். அப்படி இணையவேண்டிய கட்டாயம் என்ன? பாஜக […]

அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்ய திட்டமிட்டுள்ளேன் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் நடந்த ‘சஹ்கார் சம்வாத்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், பொது வாழ்க்கையிலிருந்து விலகியவுடன், இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்தவும், வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் போன்ற இந்து நூல்களைப் படிக்க அதிக நேரம் செலவிடவும் விரும்புவதாகக் கூறினார். இயற்கை வேளாண்மை என்பது ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் ஒரு […]

2026ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மலரும் என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு அளித்துள்ளார். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தேமுதிக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். […]