அண்ணாமலை காலாவதியானவர் அல்ல, அண்ணாமலையின் அரசியல் எதிர்காலத்தை காலம் உறுதி செய்யும் என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் பிரிவு மாநில தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுகவை கடும் நெருக்கடிக்கும், சிக்கலுக்கும் உள்ளாக்கியவர் முன்னாள் தலைவர் அண்ணாமலை. தனிமனித விமர்சனத்தை தவிர்ப்பது உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியனுக்கு நல்லது. கள்ளத்தனம் குறித்து பேசுவதற்கு உங்களுக்கு அருகதையுள்ளதா…? உங்களை பற்றி தனிப்பட்ட […]

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், கோவையில் முறைகேடாக இடம் வாங்கியதாகவும் தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது மனைவி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் நொய்யல் ஆற்றை ஒட்டி 12.14 ஏக்கர் விவசாய நிலத்தை அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர், அதிமுக முன்னாள் மாவட்ட […]

கருணாநிதியை விட மோசமான ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்துகிறார். ஏர்போர்ட் மூர்த்தி கைதுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு கடந்த 6-ம் தேதி பாமக மாநில இணைப் பொதுச் செயலாளர் அருள் வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி டிஜிபி அலுவலக வாசலில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு திடீரென வந்த விசிக கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் ‘ஏர்போர்ட்’ […]

பாஜகவை கொள்கை எதிரி என கூறியதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக தலைவர் விஜய் இடம் பெற வாய்ப்பில்லை என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை: திமுக ஆட்சி தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பது மட்டுமே நோக்கம். பாஜக 2024-ல் அமைத்த கூட்டணியில் ஒருமித்த கருத்தோடு அனைவரும் வந்தார்கள். தமிழகத்தில் எப்போதும் இல்லாத […]

பாஜக தலைமை மீது அதிருப்தியில் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிறு சிறு பிரச்சனைகள் களையப்படும். டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க இயலாது என அமித் ஷாவிடம் தெரிவித்துவிட்டேன் என அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; தமிழகத்தில் 2026-ம் ஆண்டு மக்களுக்கு நல்ல வித்தியாசமான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதே தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு என டிடிவி […]

டெல்லியில் அமித்ஷா இல்லத்தில் தமிழக பாஜக உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இதில் கொண்டனர்.. எனினும் இதில் அண்ணாமலை பங்கேற்கவில்லை.. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. தேர்தல் நெருங்கி வரும் […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், பாஜக உடன் கை கோர்த்துள்ளது அதிமுக.. மேலும் சீமானின் நாம் தமிழர், விஜய்யின் தவெக ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளதால் தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நிலவுகிறது.. இந்த சூழலில் தமிழ்நாட்டில் எப்படியாவது இந்த முறை […]

தொடக்க பால் கூட்டுறவு சங்க ஊழியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் திமுக அரசு நடத்துவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற பணியாளர்கள் சுமார் 2,000 பேர் உள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு ஓய்வூதியம் வழங்குவதில்லை. விவசாயிகளிடம் நேரடியாக பால் கொள்முதல் செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல், கொள்முதல் செய்த பாலை, […]