நாமக்கல்லில் நடந்தது கிட்னி திருட்டு அல்ல, முறைகேடு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதற்கு பாஜக முன்னாள் தலைவர் மாநில அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குராமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வறுமையில் இருக்கும் விசைத்தறி தொழிலாளர்களைக் குறி வைத்து அவர்களிடம் இருந்து சிறுநீரகத்தைப் பெற்று விற்பனை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக மருத்துவ திட்டப் பணிகள் இயக்குநர் வினித் […]

2026 தேர்தல் திமுக வரலாற்றில் ஒரு மோசமான தேர்தலாக இருக்கும் என முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. மறுபுறம் அதிமுகவுடன் பாஜக […]

அரசுப் பள்ளி குழந்தைகளின் உயிர் தமிழக அரசுக்கு அத்தனை இளக்காரமாகப் போய்விட்டதா..? என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது அவர் எக்ஸ் தளத்தில்; கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம், ரூ.64.33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்ட, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை கடந்த 20-ம் தேதி இடிந்து […]

என்னை பொறுத்தவரை மாநிலத் தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை; பாஜக-வில் தேசிய அளவிலான கட்சி பொறுப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது. உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது. பதவிகளுக்கு பின்னால் செல்பவன் நான் அல்ல என அண்ணாமலை […]

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, விரைவில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவிக்கு உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பாஜக தலைவராக பொறுப்பு வகித்த அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து விலகினார். இதை அடுத்து தமிழக பாஜக மாநில தலைவராக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஒருமனதாக தேர்வானார். மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா […]

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, கடந்த சனிக்கிழமை அன்று, சாலையில் நடந்து சென்ற பத்து வயது சிறுமியை, வாயை மூடிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, கடந்த சனிக்கிழமை அன்று, சாலையில் நடந்து சென்ற […]