சென்னை ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர், பிரபல தொழில் அதிபரான மணி. இவருக்கு 47 வயது இருக்கும். இவர் கடந்த மாதம் 27ஆம் தேதி கோடம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலின் மதுபானக்கூடத்தில் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு தீபிகா என்ற தீபலக்ஷ்மியும் மது அருந்த வந்துள்ளார். இவர் மணிக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான தோழி ஆவார். பின்னர் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு அந்த ஓட்டலிலேயே அறையெடுத்து தங்கி இரவு […]

நடிகை மீரா மிதுனை டெல்லியில் வைத்து தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். அவரை சென்னைக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில், வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோருக்கு எதிராக, வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட, ஏழு பிரிவுகளின் கீழ், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, 2021 ஆகஸ்ட்டில் இருவரையும் […]

தூத்துக்குடியில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர், தனது மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு சென்னையில் உள்ள செய்தி சேனல் அலுவலகத்திற்குள் புகுந்து வாக்குமூலம் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தாளவாய்புரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (41). இவர் CRPF வீரராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் தமிழ்ச்செல்வன் ஊருக்கு சென்றபோது கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த […]

ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 5 பேர், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 9 பேர் என மொத்தம் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற டேவிட் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகை, புத்தளம் கடற்பரப்பில் நேற்று காலை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகிலிருந்த […]

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, 5 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவம் குறைந்துள்ளது. மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. மேலும், மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அதை நாட்டுடைமையாக்கும் வேலைகளையும் இலங்கை […]

இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது. சிங்களப் படையினரின் அத்துமீறல் நடப்பாண்டிலும் தொடராமல் தடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக […]

விவாகரத்து ஆகி தனியாக வசிக்கும் ஆண்களை காதல் வலையில் சிக்க வைத்து நகை பணத்தை பறித்து சென்ற இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தின் கோனசீமா மாவட்டம் ராமச்சந்திரபுரம் பகுதியை சேர்ந்த வீரதுர்கா நீலிமா (26) என்பவர், திருமணம் முடிந்த பின்னர் விவாகரத்து பெற்று தனியாக வசிக்கும் ஆண்கள் மீது பரிதாபம் காட்டும் போல் பழகி, நெருக்கம் காண்பித்து திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து தன் வலையின் […]