நாகை அருகே கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த ரா.கங்கை நாதன்(40) என்பவருக்குச் சொந்தமான படகில் மறுவரசன்(37), வெங்கடேஷ்(31), ஞானப்பிரகாசம்(31), சந்தோஷ்(27) ஆகிய 4 மீனவர்கள் நேற்று முன்தினம் புஷ்பவனத்துக்கு கிழக்கே 10 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர், வாளை […]

அலாஸ்காவில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்ற நாளிலும் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவது, போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்பவில்லை என்பதை நிரூபிக்கின்றன என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அதிருப்தி தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நேற்று நடைபெற்றன. இருப்பினும், மூன்று மணி […]

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் அடிப்பது போன்ற வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இதனிடையே […]

Southwest Airlines விமானத்தில் பெண் ஒருவர் மதுபோதையில் சக பயணியின் தலை முடியை பிடித்து சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபகாலமாக விமானப் பயணத்தில் சிலர் செய்யும் சேட்டைகள் அத்துமீறி சென்று கொண்டிருக்கின்றன. இப்படித்தான் அண்மையில் அமெரிக்கா செல்லும் விமானம் ஒன்றில், பயணி ஒருவர் விமானி அறைக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அந்த சம்பவத்தில் விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் விபத்தும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. இதேபோல, அமெரிக்காவில் இருந்து […]