நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அங்கு இயற்கையாக உருவாகியுள்ள ஒரு பிரமாண்ட தடுப்பு ஏரி தற்போது நிரம்பி வழிவதாகவும், அடுத்த சில நாட்களில் அது உடையும் அபாயம் உள்ளதாகவும் சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சீன நீர்வள அமைச்சகத்தின் முதற்கட்ட மதிப்பீட்டின்படி, இன்று காலை நிலவரப்படி இந்த ஏரியில் சுமார் 20 லட்சம் கன மீட்டர் நீர் தேங்கியுள்ளது. அடுத்த 3 நாட்களில் மேலும் 30 லட்சம் கன மீட்டர் […]

நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தை தொடர்ந்து பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி ஆற்றில் உருவான கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. ஆற்றின் கரையோரத்தில் இருந்த குடியிருப்புகள், பாலங்கள் மற்றும் வாகனங்கள் கண் இமைக்கும் நேரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். இதில் மாயமானவர்களில் சுமார் 300 பேர் இந்தியர்கள் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கனால் […]

நேபாள நாட்டின் போட்டேகோஷி ஆற்றுப்படுகையில் உருவான திடீர் கோர வெள்ளத்திற்கு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பனிச்சரிவே முதன்மை காரணமாக இருக்கலாம் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கனால் தெரிவித்துள்ளார். Nepal Floods | போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம் அப்பகுதியிலிருந்த பல்வேறு கிராமங்களை வாரிச்சுருட்டி அடித்துச் சென்றுள்ளதுடன், சியாப்ருபெசி உள்ளிட்ட முக்கிய பகுதிகளை கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளது. இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் மாயமானவர்களின் எண்ணிக்கை […]

Nepal Floods | நேபாள நாட்டின் ராசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி(Bhotekoshi)ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஏராளமான மக்களும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதுவரை 17 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் சில பகுதிகளில் ஹெலிகாப்டர்களை […]