தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையில் உருவாக்கியுள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் இக் கூட்டணியில் கடந்த 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஒரு சில கட்சிகள் இன்னும் இணையாமல் இருக்கின்றன. அந்தக் கட்சிகளையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கொண்டு வருவதற்கான […]

அதிமுகவில் இருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், பாஜகவில் இணையவுள்ளார். புதுவை மாநில அதிமுகவில் புரட்சித் தலைவி ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்தவர் பாஸ்கர். கடந்த 2011-16, 2016-21-ம் ஆண்டுகளில் முதலியார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் 3-வது முறையாக அதிமுக சார்பில் போட்டியிட்ட பாஸ்கர் தோல்வியடைந்தார். இருப்பினும் கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். புதுச்சேரி […]

பாஜகவுடன், கூட்டணியில் உள்ள எந்த கட்சியோடும் கூட்டணி வைக்க 1% கூட வாய்ப்பு இல்லை என தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; எஸ்ஐஆரால் தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் உள்ளது. இதனால்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தவெக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினோம். இதுபற்றி தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே தவெக போராட்டம் […]

தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டும் அதிமுக, இதனைக் கண்டித்து வரும் 17-ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் சிறப்பு […]

பீகார் மாநிலத்தில் ஆளும் கூட்டணியின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி தற்போதைய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.. மேலும் இந்த “பெரும் மக்கள் தீர்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியை மக்களுக்கு சேவை செய்ய அதிகாரம் அளிக்கும்” என்றும் கூறினார். தொடர்ச்சியான எக்ஸ் பதிவில் “ பீகாரின் “முழுமையான வளர்ச்சியை” உறுதி செய்துள்ளதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த ஆணையைப் […]

2025 பீகார் சட்டசபை தேர்தல், கடந்த பல தசாப்தங்களில் மாநிலம் கண்ட மிகச் சுவாரஸ்யமான அரசியல் நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு இத்தனை அதிக வாக்குப்பதிவு இதுவே முதல் முறை. குறிப்பாக, பெண்களின் பங்குபற்றுதலே இந்தத் தேர்தலின் பெரிய மாற்றக்காரியாக பார்க்கப்படுகிறது. பீகார் 2025: பெண்களின் வாக்குப்பதிவு இந்த ஆண்டு பிகாரில் மொத்த வாக்குப்பதிவு 67.13% ஆக இருந்தது.ஆனால் அதைவிட முக்கியமானது பெண்கள் வாக்குப்பதிவு: 71.78% ஆண்கள் வாக்குப்பதிவு: […]

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நிதியமைச்சராக அல்ல, கட்சி தொண்டராக பணியாற்றுவேன்” என கட்சி நிர்வாகிகள் மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்; தமிழகம் முழுவதும் 4 லட்சம் பொறுப்பாளர்கள் உள்ளனர். மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள் வந்துள்ளது என்பதை ஒவ்வொரு அணியும் சொல்லும் அளவிற்கு 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தந்துள்ளார். 2024-ம் […]

பீகாரில் மொத்தம் 243 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்துள்ளது.. நவ.6-ம் தேதி 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 122 தொகுதிகளுக்கு இன்று 2-வது கட்ட வாக்குப்பதிவில் 67.14% வாக்குகள் பதிவாகி உள்ளது.. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.. பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனினும் பிரபல தேர்தல் வியூக […]