அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப்போவதாக வெளிவரும் தகவல்கள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; திமுகவினர்தான் அடிமை மாடலும், பாசிச அரசியலும் செய்கிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா பெண்களை கேவலமாக பேசுகிறார். பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. வகுப்பறையில் ப வடிவில் இருக்கைகள் இருக்க வேண்டும் என்பது என்ன அடிப்படையில் என்பது தெரியவில்லை. படிக்கும் மாணவர்களுக்கு […]

அதிமுக சார்பில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, கோவை வடவள்ளி பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசுகையில், கோயிலை கண்டாலே திமுகவுக்கு கண்ணு உறுத்துகிறது. அதிலிருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். இது எப்படி நியாயம், தெய்வபக்தி படைத்த மக்கள் எதற்காக கோயில் உண்டியலில் பணத்தை போடுகிறார்கள், கோவிலை மேம்படுத்ததானே.. ஆனால் அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் […]

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் சார்ந்த இந்து முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரமாண்டமான நிகழ்வில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது சமீபத்திய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டங்களில் ஒன்றாகும். சட்டமன்றத் தேர்தல்களுக்கு ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இந்த மாநாடு அரசியல் வட்டாரங்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. […]

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் செயற் குழுக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று பேசினார். இதையடுத்து செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், “திமுக மற்றும் பாஜக உடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என்பதை உறுதியாக […]

சென்னை திருவொற்றியூரில் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உயிரிழந்ததற்கு ஆளும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து தனது சமூகவலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ சென்னை திருவொற்றியூர் பகுதியில் தேங்கிக் கிடந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து 17 வயது பள்ளி மாணவன் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உயிரிழந்த அம்மாணவனின் குடும்பத்தாருக்கும் […]

முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் பேசியதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில், மதுரையில் கடந்த 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. அம்மாநாட்டில் அரசியல், மதம், பொது அமைதிக்கு எதிராகப் பேசக்கூடாது என்பன உள்ளிட்ட 52 நிபந்தனைகளை, மாநகர காவல் துறை விதித்திருந்தது. […]

31 வருடங்கள் தமிழகத்தில் ஆட்சி புரிந்த, பொன் விழா கண்ட அதிமுகவை பாஜக மட்டும் அல்ல எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி ஆவேசமான உரையாற்றினார். அந்த உரையில், “அதிமுக முடிந்துவிடும்” என மு.க. ஸ்டாலின் பேசுவது வெறும் பகல் கனவு எனக்கூறி அவர் கடுமையாக தாக்கினர். “நாட்டை காக்க […]