பொதுமக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தும்படி நடக்கும் கோழி ராஜன் மீது நடவடிக்கை எடுக்க, காவல்துறை ஏன் தயங்குகிறது..? என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களைத் தேடிப் பிடித்து, அவர்களுக்குப் பதவி கொடுத்து அழகு பார்த்து, அவர்கள் பெரிய குற்றங்களில் ஈடுபடும்போதும் கண்டுகொள்ளாமல், அவர்கள் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே குறியாக இருப்பது திமுக […]

பிகார் போல தில்லுமுல்லு செய்து தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சி செய்து வருகிறது என திருமாவளவன் குற்றச்சாட்டு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாட்டில் பேசிய எம்.பி திருமாவளவன்; தேர்தல் ஆணையமும் பாஜகவும் சேர்ந்து கொண்டு பிகாரில் திருட்டு வேலைகளை செய்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. அமித்ஷா, தமிழகத்திற்கு வரும் போது 2026-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் அமையும். கூட்டணி ஆட்சி […]

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல கணேசன் காலமானார்.. அவருக்கு வயது 80. அண்மையில் தனது சென்னை வீட்டில் படியில் இருந்து விழுந்ததில் இல. கணேசனுக்கு காயம் ஏற்பட்டிருந்தது.. கடந்த சில நாட்களாக சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.. தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாகவும், தமிழ்நாட்டு பாஜகவில் அதிகம் நேசிக்கப்பட்ட தலைவராகவும் இல. கணேசன் இருந்தார்.. கண்ணியமான பேச்சுக்கும் அறியப்பட்டவர் இல. கணேசன். […]

2026-ல் மீண்டும் ஆட்சியமைக்க ஓய்வின்றி களப்பணியாற்ற வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்; சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதி பிரச்சனைகளை களையவும், மக்கள் குறைகளை தீர்க்கவும் ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின், ‘தாயுமானவர் திட்டம்’ ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறோம். நலத்திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் நமது செல்வாக்கு அதிகரித்துள்ளது. நாள்தோறும் கட்சி நிர்வாகிகள் […]

கிட்னி திருட்டு விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ வெட்கமே இல்லாமல் பேசுகிறார் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் ஏழைகளை குறிவைத்து கிட்னி திருட்டு குற்றங்கள் அதிகரித்து வருவதாக கடந்த மாதம் புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்திய நிலையில், இடைத்தரகர் ஆனந்தன் என்பவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.. இவர் திமுக நிர்வாகி […]

சுற்றுச்சூழல் மாசுபடக் காரணமாக இருக்கும் மீன் கழிவு ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். தமிழக பாஜக முன்னாள் அண்ணாமலை இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவில் “ தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் அமைந்துள்ள 3 மீன் கழிவு ஆலைகளால், கடந்த 4 ஆண்டுகளாக, அந்தப் பகுதியில் மண்வளம், நிலத்தடி நீர் மற்றும் காற்று ஆகியவை மாசுபட்டு, பொதுமக்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுகின்றனர். […]

அனைத்து ஏழைகள், பட்டியல், பழங்குடியின மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணை படி, ஜூலை 27 தொடங்கி இரண்டாம் கட்ட பயணம் முடித்துக் கொண்டு தற்பொழுது மூன்றாவது கட்ட […]