2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய அவர்; அதிமுக ஆட்சியில் மேட்டூர் அணையிலிருந்து 100 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் தொடங்கப்பட்டு, 6 ஏரிகளுக்கு நீர் கொண்டு வரப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் […]

தனது தந்தையை கொலை செய்த விவகாரத்தில், சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜ்குமாரை 17 ஆண்டுகளுக்கு பிறகு கல்லூரி மாணவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்ட ஒழுங்கை பராமரிப்பதும், குற்றங்கள் நிகழா வண்ணம் தடுப்பதும் தான் காவல்துறையின் கடமை என்பதை இந்த திராவிட மாடல் அரசு நிர்வாகம் உணருமா…? என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி […]

விளம்பர நாடகங்கள் நடிக்கும் நேரத்தில், உடனடியாக நிறைவேற்ற வேண்டிய முக்கியப் பணிகள் குறித்து முதலமைச்சர் சிந்திப்பது, தமிழக மக்களுக்கு நல்லது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.. இந்த நிலையில் நேற்று திருப்பூரில் எஸ்.ஐ கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “தமிழகத்தில்‌ அதிகரித்து […]

திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்காமல் அலைக்கழிக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகளிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி; தொடக்க கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கு பல்வேறு ஆவணங்களை கேட்டு அவர்களை சிரமப்படுத்துகின்றனர். திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்காமல் அலைக்கழிக்கிறது. இதுகுறித்து தஞ்சாவூருக்கு வந்திருந்த பிரதமரிடம் பேசினேன். இப்போது கடன் பெறுவதற்கு ஆவணங்கள் தேவையில்லை என்று கூறுகிறார்கள்.. […]

அரசியல் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து மக்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் […]

இயற்கை வேளாண் பொருட்களைத் தேடி வாங்கும் அளவுக்கு மக்களிடையே மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி மற்றும் ‘We The Leader Foundation’ என்ற அமைப்பின் சார்பில் இளையோர் வேளாண் மாநாடு நேற்று நடை பெற்றது. நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவரும், அமைப்பின் தலைமை ஊக்குவிப்பாளருமான அண்ணாமலை, இந்திய பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மையின் பங்கு மிகக் குறைவாக இருக்கிறது. அதை மாற்றக்கூடிய […]

திருவெறும்பூர் அருகே துவாக்குடி அரசு மாதிரி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தற்போது வரை மாணவனின் இறப்பிற்கு காரணத்தைக் காவல்துறை கண்டுபிடிக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருவெறும்பூர் அருகே துவாக்குடி அரசு மாதிரி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் இரண்டு […]

மக்கள் பிரச்சினைகளுக்காக முதன்முதலாக குரல் கொடுப்பது அதிமுக தான் என கோவில்பட்டியில் நடந்த பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்துக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர்; திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. எப்போது இந்த ஆட்சி அகற்றப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். […]

திருச்சி அரசுப் பள்ளி மாணவர் தற்கொலை குறித்த முழு விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அரசு மாதிரி பள்ளி இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் முதல்வர் ஸ்டாலின் இந்த பள்ளியை தொடங்கி வைத்தார்.. இந்த பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12 ஆம் […]