காவிரி படுகை பாசனத்திற்காக மேட்டூர் அணை செப்.1ம் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தாமதமானதாலும், கர்நாடக அரசிடமிருந்து உரிய நீர் கிடைக்காததாலும் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உரிய தேதியில் தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் டெல்டா விவசாயிகள் […]

காவிரி ஆணையத்தின் உத்தரவை ஏற்று கர்நாடகா ஏன் தண்ணீர் திறக்கவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காவிரியில் இருந்து தமிழ்நாடிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத்த தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி, காவிரி நீர் மேலாண்மை […]

கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதை அடுத்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 80 அடியைக் கடந்து உயர்ந்துள்ளது. இதனால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பெருமகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் அடைந்துள்ளனர். அணைக்கு வரும் நீரின் வரத்தைப் பொறுத்து நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் 79.78 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி […]