சார்பதிவாளர் அலுவலகங்கள் வீடியோ காட்சிகளுடன் சேர்த்து குரல் பதிவுகளையும் கண்காணிக்க பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் தற்போது பதிவுத்துறையில் 585 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் சொத்து ஆவண பதிவு, திருமணப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 டோக்கன்களும் வழங்கப்பட்டு ஆவணப்பதிவுகள் நடக்கின்றன. விசேஷ நாட்களில் கூடுதலாகவே டோக்கன் வழங்கப்படுகின்றன.. […]
CCTV
ரயில்வே கேட் அமைந்திருக்கும் லெவல் கிராசிங் பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு 11 முக்கிய நடைமுறைகளை பின்பற்றும் படி இந்திய ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாகனம் மீது பாசஞ்சர் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியம் ஒரு காரணமாக என சொல்லப்படுகிறது. மேலும் இந்த கேட்டில் இன்டர்லாக்கிங் செய்யப்படாமல் இருந்தது மற்றொரு காரணம் அதிகாரிகள் […]
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கும்பல் ஒன்று காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கி விட்டு சிறையிலிருந்த மூன்று கைதிகளை அழைத்துச் சென்ற விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் புர்கா மாவட்டத்தில் உள்ள நேபா நகரில் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய அந்த கும்பல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுதலை செய்து மூன்று பேரை அழைத்துச் சென்றது. இது தொடர்பான சிசிடிவி […]
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தங்கியிருந்த ஓட்டல் அறையில் சிசிடிவி கேமராக்கள் இருந்ததால் உறவினர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சீர்காழியில் பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உள்ளன. மேலும் இங்கு அரசு அலுவலகங்களும் இருப்பதால் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமப்புற மக்களுக்கு இது ஒரு மையமாக விளங்கி வருகிறது. சீர்காழி அரசு மருத்துவமனை சாலையில் சோழா இன் என்ற தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து […]
தற்போது இருக்கும் காலகட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிசிடிவி காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் பெண் ஒருவரை திடீரென அப்பகுதிக்கு வரும் ஆண் ஒருவர் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை இழுத்து முத்தம் கொடுக்கிறார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் பீகார் மாநிலத்தில் உள்ள […]
நாட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தான் பாதுகாப்பு இல்லை என்று நினைத்திருந்தால் தற்போது நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் விலங்குகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது. டெல்லியைச் சார்ந்த தெரு நாய் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது நாட்டை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. டெல்லியின் ஹரி நகர் பகுதியில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. பகுதியில் இருக்கக்கூடிய பூங்கா ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தெரு நாய் ஒன்றைப் பிடித்து பாலியல் பலாத்காரம் […]
அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த நாய், தாய் அருகே உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூரமான சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோகி மாவட்டத்தைச் சார்ந்தவர் மகேந்திர மீனா. இவருக்கு ரேகா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த மகேந்திரன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
மது போதை தலைக்கேறியதால் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றித் திரிந்த நபரை பிடித்து மக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தேனி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போதை தலைக்கேறி விட்டால் கை கால் புரியாது என கேட்டிருப்போம். ஆனால் அது போன்ற ஒரு நிகழ்வு தேனி பகுதியில் அரங்கேறி இருக்கிறது. போதை தலைக்கு எறியதால் ஆடைகள் இன்றி சாலைகளில் சுற்றி திரிந்த ஒரு நபரால் தேனி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. […]