தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளிலிருந்து நாளை விலகக்கூடும். அதேநேரத்தில், வடகிழக்குப் பருவமழை தமிழகம்-புதுச்சேரி-காரைக்கால் பகுதிகள், கேரளா-மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளில் நாளை தொடங்க வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல்- பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் […]

இருமல் மருந்தால் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மருந்து ஏற்றுமதி செய்ததில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகளின் வீடுகள்,மருந்து ஆலைகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மத்திய பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். விசாரணையில், இருமல் மருந்தில் டைஎதிலீன் கிளைகோல் நச்சு அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, […]

தமிழகத்தில் திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. […]

தமிழகத்தில் காஞ்சிபுரம், கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தென்னிந்திய பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை, வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி, […]

தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்பு பேருந்துகள் என 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு […]