கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில்; கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த கொலு கொண்டாட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.தினமும் மாலை 4 முதல் 5 மணிவரை நடைபெறும் வழிபாடு […]

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வகுப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு ‘அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI)’ படிப்புகளை சென்னை ஐஐடி விரிவுபடுத்துகிறது. இந்த படிப்புகள் ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளையுடன் இணைந்து ஸ்வயம் பிளஸ் மூலம் ஆன்லைன் முறையில் வழங்கப்படுகின்றன. முன்னர் வழங்கப்பட்ட ஐந்து படிப்புகளுடன், ஆசிரியர்களுக்கான ஒரு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 25 முதல் 45 மணி நேரம் வரை கால அளவு கொண்ட இந்தப் படிப்பு, இலவசமாக […]

தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கமாக, மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் இணை மேம்பாட்டு ஆணையர் தலைமையிலான ஒப்புதல் குழு பிரிவு, எட்டு புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உத்திசார் முதலீடுகள் தகவல் தொழில்நுட்பம்/ தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (IT/ITES), உற்பத்தி, பொறியியல் மற்றும் தளவாடத் துறைகளில், சுமார் 800 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதுடன், 3,500க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். தமிழ்நாட்டின் பொருளாதார […]

அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-ல் பயிற்சி பெற்றுள்ள மாணவர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்று பயன்பெறலாம். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PMNAM) இன்று தருமபுரி (கடகத்தூர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பொதுத்துறை மற்றும் பிரபல முன்னனி […]

தமிழகத்தில் முதல் முறையாக அதிகபட்சம் 2,500 சதுர அடிபரப்பளவு கொண்ட மனையில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு பொதுமக்கள் சுயசான்றிதழ் முறையில் வீடுகட்டும் கட்டட அனுமதியை இணையதளம் வாயிலாக ஒற்றைச்சாளர முறையில் உடனடியாக ஒப்புதல் பெறும் திட்டம் தற்போது தூண்தளம் மற்றும் இரண்டு தளம் (Stilt + 2 Floors) வரையுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கும் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (22.07.2024) அன்று தலைமைச் […]

தமிழகத்​தில் இன்று திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கடலூர் உள்​ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்​ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நாளை முதல் 10-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் […]

தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி,, வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை […]

அரசு, அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சென்னையில் செப்டம்பர் 8-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்தக் முகாமில், ஆசிரியர்களுக்கு மாணவர்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் உயர்நிலை மாணவர்களுக்கான […]