பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-22ல் தேவராஜன் தெருவில் உள்ள சமுதாயக் கூடம், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-29ல் இராமலிங்க காலனி சி பிளாக் பிரதான சாலை, வாழைத்தோப்பு அருகிலுள்ள நியாய விலைக்கடை, இராயபுரம் […]

பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாள் விழா பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்: தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் அறிவிப்பிற்கிணங்க தருமபுரி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா. தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டிகள் முறையே 01.09.2025 & 02.09.2025 ஆகிய நாள்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு […]

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதையின் (College lane) பெயரை ‘ஜெய்சங்கர் சாலை’ என்று மாற்றம் செய்ய அனுமதி அளித்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. கல்லூரி பாதையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்து வந்த நடிகர் ஜெய்சங்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் காா்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில்; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து […]

1000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் வேளாண் பட்டதாரிகள் சுய தொழில் தொடங்க மானியம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. உழவர்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் அரசால் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வேளாண் பட்டய மற்றும் பட்டப் படிப்பை முடித்த இளைஞர்களின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து […]

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூன்று நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூன்று நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி வரும் 10.09.2025 முதல் 12.09.2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி நடைபெற உள்ளது. இப்போது அழகு […]

புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளுக்கு முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யும் வகையில் ஒவ்வொரு வகையான கட்டிடத்துக்கும் மதிப்பு நிர்ணயம் செய்துள்ளது தமிழக அரசு. அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட விரும்பும் கட்டுமான நிறுவனத்தினர், இடத்தை விலைக்கு வாங்கி, குடியிருப்பு கட்ட திட்டமிட்டு, அதன்பின் வாங்க வருவோருடன் கட்டுமான ஒப்பந்தம் செய்வது வழக்கம்.குடியிருப்பு வாங்க முன்வருவோரின் பெயர்களில் பத்திரப்பதிவு செய்யும்போது, நிலத்தின் பிரிக்கப்படாத பாக […]

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ”கேட்” நுழைவுத் தேர்வுக்கு வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களும் ‘கேட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்கின்றன. […]