சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் 26.06.2025 அன்று காலை 11.00 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அஞ்சல்துறையின் பொருள்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைகளை கோட்ட அளவிலான குறைதீர்ப்பு மன்றத் தலைவர் விசாரிப்பார். இந்தக் கோட்டத்திற்கு உட்பட்ட தங்கள் புகார்களை வாடிக்கையாளர்கள் சென்னை நகர மத்திய கோட்ட முதுநிலை கண்காணிப்பாளருக்கு […]
Chennai
இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், நாளை கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வடக்கு ஆந்திரா–தெற்கு ஒடிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் […]
தமிழில் பெயர் பலகைகள் வைக்காத கடைகள் மற்றும் நிறுவனத்திற்கு, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளின்படி, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் தான் உள்ளது. அனைத்து பெயர் பலகையிலும் தமிழைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அனைத்து பொது இடங்களிலும் உள்ள பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள், […]
ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் உயர்மட்டப்பாதை பணியின்போது, இணைப்பு பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விரைவில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மணப்பாக்கத்தில் உள்ள எல் அண்ட் டி தலைமை அலுவலக பிரதான வாயிலுக்கு அருகில் ஒரு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட இரண்டு தூண்கள், […]
தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டான கோயம்பேடு சந்தையில் இன்றைய தினம் காய்கறி விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் பெய்து வந்த கோடை மழையின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளின் விளைச்சல் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த வாரங்களில் காய்கறி விலை உயர்வு ஏற்பட்டது. விலை உயர்ந்தாலும் பொதுமக்கள் காய்கறி வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தனர். ஏனென்றால் இன்னும் விலை அதிகரிக்குமோ என்ற அச்சம் […]
மத்திய பணியாளர் தேர்வாணையம் காலி பணியிடங்களுக்கான 13-வது கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மத்திய பணியாளர் தேர்வாணையம் “காலி பணியிடங்கள் 2025”-க்கான 13-வது கட்ட தேர்வு குறித்த அறிவிப்பை 02.06.2025-ம் தேதி வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள மத்திய அரசின் அமைச்சகங்கள்,துறைகள், அமைப்புகளால் அறிவிக்கப்படும் பல்வேறு காலி பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான கணினி அடிப்படையிலான போட்டித் தேர்வை வெளிப்படையான முறையில் ஆணையம் நடத்துகிறது. பதவி, வயது […]
ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை அளித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும்படி திருப்பத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தனது குழந்தைகளுக்கு சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் எந்தச் […]
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது 2 நாட்களாக மழை படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்த நிலையில், நேற்று அதைவிட கூடுதலான இடங்களில் மழை பெய்தது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையமும் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு கனமழை வெளுத்து வாங்கும் என்று கூறி உள்ளது. இந்த […]
தமிழகத்தில் இன்று முதல் வரும் 16-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூன் 16-ம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை […]
தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 7 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூன் 15-ம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். இன்று ஈரோடு, […]

