சென்னையில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மூத்த குடிமக்கள் பயணிக்க கட்டணமில்லா பயண டோக்கன், இன்று முதல் ஜூலை 31 வரை அடையாறு, வியாசர்பாடி, ஆலந்தூர், அயனாவரம் உள்ளிட்ட 40 பணிமனை பேருந்து நிலையங்களில் காலை 8 மணி முதல் இரவு 7.30மணி வரை வழங்கப்பட உள்ளன. சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்க முதியோருக்கு இன்று முதல் இலவச பேருந்து பயண டோக்கன் வழங்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னையை […]

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் மீது மர்ம நபர்கள் லேசர் ஒளி அடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று 4வது முறையாக, இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் 288 வகை விமானம் தரையிறங்கும் தருவாயில் அதன் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது. விமானி சிறிது நேரத்துக்கு பார்வை தடுமாறிய போதும், சூழ்நிலையை சரியாக மதிப்பீடு செய்து விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடிந்தது. பின்னர், இந்த […]

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், இன்று முதல் 5 விரைவு ரயில்கள் தற்காலிகமாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி எழும்பூர்-கொல்லம், எழும்பூர்-மதுரை, எழும்பூர்-மன்னார்குடி, எழும்பூர்-திருச்செந்தூர், எழும்பூர்-குருவாயூர் ஆகிய 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கடந்த 18-ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இருமார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது. எனவே, வெளிமாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வரும் பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளுக்கு இணைப்பு ரயில்களை […]

வீடு, மனைகளை விற்பனை செய்யும் புரோமோட்டர்கள் ரியல் எஸ்டேட் அனைத்தும், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதை காட்சிபடுத்தும் வகையில் அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம், 2016, குடியிருப்பு மற்றும் வணிகத் திட்டங்களின் வாங்குபவர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் இடையிலான பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்தி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறையைக் […]

வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. வார இறுதி நாட்களை முன்னிட்டு 20.06.2025 (வெள்ளிக்கிழமை) 21.06.2025 (சனிக்கிழமை) , 22.06.2025 (ஞாயிறு) அன்று சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் […]

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் உப அறநிறுவனமான சென்னை வியாசர்பாடியில் உள்ள அருள்மிகு கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ( TNHRCE Recruitment 2025 )வெளியாகியுள்ளது. காலிப்பணியிடம்: எழுத்தர், அலுவலக உதவியாலர் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தம் 5 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பு: திருக்கோயில் கீழ் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க […]

பாமக பிரச்சனைக்கு திமுக காரணமில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டினார். அவர் பேசுகையில், என் கட்சிக்கும், என் சமூதாயத்துக்கும் நான் துரோகம் செய்தால் அது தான் என் வாழ்நாளின் கடைசி நாளாக இருக்கும். நடக்கின்ற பிரச்சனைக்கு யார் வில்லன் என்றால் திமுக தான். ஆட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை […]

இன்று பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே 27 மின்சார ரயில் ரத்து செய்யபட்டுள்ளது. சென்னையில் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில், ஐடி துறை என பல்வேறு தேவைகளுக்காக அண்டை மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து வசித்து வருகின்றனர். சென்னை மக்களின் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக புறநகர் மின்சார ரயில் சேவைகள் இருந்து வருகின்றன. சென்னை பயணிகளுக்கு புறநகர் […]

தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் மத்திய பா.ஜ.க. அரசு பார்க்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயல்வதாக மத்திய அரசை கண்டித்து, திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் தி.க.தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு, திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் […]

வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; 20.06.2025 (வெள்ளிக்கிழமை) 21.06.2025 (சனிக்கிழமை) , 22.06.2025 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு […]