கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில்,உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 12-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் உறுப்பினராக சேரலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற […]
Chennai
துணை தேர்வில் அரியர் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் டிப்ளமா தேர்வில் இறுதி செமஸ்டர் மற்றும் துணை தேர்வை எழுதிய மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் அரியர் வைத்துள்ளனர். அம்மாணவர்கள் உயர்கல்வி பயிலவும் வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல் இருக்கும் […]
தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், […]
திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வரும் மாபெரும் திட்டங்களால் தமிழகம் அதிவேகமாக நகரமாயமாகி சிறந்த மாநிலமாக திகழ்வதாகவும், திமுக அரசின் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது என தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் நிறைவேற்றி வரும் பல்வேறு திட்டங்கள் காரணமாக தமிழகம் விரைந்து நகரமயமாகி வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி […]
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்ற மீன் பண்ணைகளுக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தருமபுரி மாவட்ட மீன்வளர்போர் மேம்பாட்டு முகமையில் மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து அரசு மானியத் திட்டங்களை […]
மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க திமுக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக தேர்தல் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து, மாவட்ட வாரியாக கருத்துகளை கேட்டது. தொடர்ந்து 8 மண்டலங்களாக பிரித்து, மண்டல […]
சென்னை நொளம்பூர் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கணவரை பிரிந்து, தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நிலையில், இரவு நேரங்களில் மட்டும், தனது அம்மாவை துணைக்கு அழைத்து தூங்கி வந்துள்ளார். ஆனால், சம்பவத்தன்று இரு பிள்ளைகளும் தனது அக்கா வீட்டில் இருந்துள்ளனர். இதனால், அன்றிரவு அம்மாவின் துணையின்றி, இரவு தனியாக […]
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம்பெண்கள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக […]
தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 9 முதல் 12-ம் தேதி வரை சில இடங்களில் […]
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் இளங்கலை, முதுகலை, பட்டயம் சான்றிதழ் மற்றும் முதுகலை வணிக நிர்வாகவியல், முதுகலை கணினி பயன்பாடுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், http://online.ideunom.ac.in என்ற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் இளங்கலை, […]

