ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், திமுக, நாதக, அமமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500 பேர் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு அதிமுக அடையாள அட்டை வழங்கி, தேர்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல திமுகவை சேர்ந்த பலர் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் […]

தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மறுபாடு காரணமாக இன்று முதல் 28-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் […]

நீதிமன்ற உத்தரவுகளை தவறாமல் செயல்படுத்த வேண்டும் என மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 20-ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்ற வழக்கில், “தொகையை திருப்பி செலுத்துதல் உள்ளிட்டவற்றில் வாரியம் மீண்டும் மீண்டும் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருக்கிறது. அவமதிப்பு என்ற நிலை வந்த பிறகே உத்தரவுகளை செயல்படுத்துவதையும், அதன் பிறகும் உத்தரவை நிறைவேற்ற அவகாசம் கேட்பதையும் ஏற்க முடியாது. இதுபோன்றவற்றை விரைந்து சரி […]

சென்னையிலிருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து மதுரை செல்லக்கூடிய விமானம் விமான நிலையத்திலேயே தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனெனில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது, அதில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் விமானத்தை உடனே தரையிறக்க முடியாமல் போயிருக்க வாய்ப்பு உள்ளது. மேலும், எதிர்பாராமல் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கும். தற்போது, […]

சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025 2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூபாய் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக […]

தமிழகத்தில் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும், வரும் 23 முதல் 27-ம் தேதி […]

சமூக நலத்துறை அறிமுகப்படுத்தியுள்ள மூத்த குடிமக்கள் செயலியில் (Senior Citizen App) அருகில் உள்ள முதியோர் இல்லம் மற்றும் மருத்துவமனை விவரங்கள், குறைகளை தெரிவித்தல் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதை அனைவரும் பயன்படுத்துமாறு சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக் கொண்டுள்ளார். இச்செயலியின் செயல்பாட்டை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களால் செப்டம்பர் 2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியில், மூத்த குடிமக்களுக்கு […]

திருவள்ளூர் கோட்டத்தை சேர்ந்த 110 கிலோ வோல்ட், பெரியபாளையம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கேவி நெல்வாய் மற்றும் நெய்வேலி மின்பாதை பராமரிப்பு பணிகள் வரும் ஜூன் 24-ம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 வரை பெரியபாளையம் பஜார், நெல்வாய், பாலேஸ்வரம், ராசந்திரபுரம், அஞ்சாமேடு, பனம்பாக்கம், ஆலபாக்கம் அத்திவாக்கம், கிளாம்பாக்கம், நெய்வேலி பெத்தநாயகபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு […]

கோட்ட அளவிலான அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம் 30.06.2025 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. கோட்ட அளவிலான அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் 30.06.2025 அன்று நடைபெற உள்ளது. குறைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 26.06.2025 ஆகும். தபால் சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை […]

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் ஜூன் 23 முதல் 27 வரை அனுசரிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநனர்; அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை உலக போதைப் பொருள் தடுப்பு மற்றும் கடத்தல் எதிரான மாநில அளவிலான […]