ஞானசேகரன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு காவல்துறை தான் காரணம் என மனசாட்சியின்றி பச்சை பொய்யை மு.க.ஸ்டாலின் கூறுகிறார் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காகத் தி.மு.க.வினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். […]

பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் ஊர் திரும்புவதற்காக 2,513 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மேலும், மே 31, ஜூன் 1 ஆகிய நாட்கள் வார விடுமுறை என்பதால், சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் […]

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் தென்மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு கேரளாவில் முன்னதாகவே பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. 8 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த […]

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவானது. கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைய கூடும். மேலும், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் […]