10, 11- 12-ம் வகுப்பு மாணவர்கள் சேரும் வகையில் ஏஐ, டேட்டாசயின்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம், ஆர்க்கிடெக்சர் டிசைன், இன்ஜினீயரிங் பயாலஜிக்கல் சிஸ்டம், சட்டம் ஆகியவை தொடர்பான 10 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் code.iitm. ac.in/schoolconnect என்ற இணையதளம் மூலம் ஜூலை 25-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவுசெய்ய வேண்டும். பள்ளி இணைப்புத் திட்டம் என்பது ஐஐடி மெட்ராஸில் உள்ள அவுட்ரீச் […]

மின்சார பேருந்துகளில் டீலக்ஸ் கட்டணமே வசூலிக்கப்படும். இதர பேருந்துகளைப் போல சிங்காரச் சென்னை பயண அட்டை, ரூ.1000 பயண அட்டை, டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். பேருந்துகளை மின்னேற்றம் […]

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோர் கட்டாயம் தொழில் உரிமம் பெற வேண்டும். தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023 விதி 289(1) ன்படி நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோர் கட்டாயம் தொழில் உரிமம் பெற வேண்டும். நகர்புறங்களில் 500 சதுர அடி வரை உள்ள கடைகளுக்கு சுய சான்று அடிப்படையில் ஒரே நாளில் தொழில் உரிமம் வழங்க இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. […]

சென்னை பரங்கிமலை காவல் நிலையம் வாசலில் இன்று சவுக்கு சங்கர் மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது என்னையும் அஜீத் மாதிரி அடிப்பீங்களா? போலீஸ் அராஜகம் மக்களுக்கும் தெரியட்டும் என கோஷமிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சவுக்கு மீடியா கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசால் எத்தனை கொடுமைகளை சந்தித்து கொண்டு இருக்கிறது என எல்லாருக்கும் தெரியும். என் வீட்டில் மலம் ஊற்றப்பட்டது. சாக்கடை ஊற்றப்பட்டது. என் மீது […]

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய ஜுலை 18-ம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இவ்வறிவிப்பிற்கிணங்க 2022ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நாள் விழா […]

இளைஞர் அஜித் படுகொலை வழக்கிலிருந்து, காவல்துறை உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதா..? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் […]

swiggy, zomato போன்ற நிறுவனங்கள் கமிஷன் தொகையை குறைக்காவிட்டால் உணவு வழங்க மாட்டோம் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. நவீன வாழ்க்கை முறைமையில், வீடிலிருந்தபடியே உணவு வாங்கும் வசதியால் ஆன்லைன் டெலிவரி செயலிகள் மக்களிடையே பிரபலமடைந்துள்ளன. ஆனால் சமீப காலமாக ஆன்லைன் தளங்களில் உணவுகளின் ரேட் அதிகரித்து வருகிறது. மேலும், டெலிவரி சார்ஜ், பிளாட்பார்ம் பீஸ், பேக்கிங் பீஸ் என ஏகப்பட்ட கூடுதல் கட்டணங்களையும் போட ஆரம்பித்தன. அதே […]

சென்னையில் 8 இடங்களில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்து மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மயானங்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. எனினும் பல்வேறு […]

போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயலும்போது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டதில் அஜித் உயிரிழப்பு” சிவகங்கை மடப்புரத்தில் இளைஞர் அஜித் குமார் உயிரிழப்பு குறித்து போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் தகவல். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். சனிக்கிழமை இரவு அஜித்குமார் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் கடுமையாக தாக்கியதே அஜித்குமார் […]