fbpx

அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராகப் பதவி வகித்த கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுக முன்னாள் நிர்வாகியான விஜய நல்லதம்பி ஆகியோர் ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக விருதுநகர் காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. “நான் …

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு திருச்சியில் நடைபயிற்சி மேற்கொண்டபோது கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் மனைவி …

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில் கைதான ஞானசேகரனை குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். நாளை இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த …

விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் …

பள்ளி கழிவு நீர்த்தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்ற கோரி தந்தை அளித்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் பழனிவேல், சிவசங்கரி தம்பதியினரின் மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமி எல்கேஜி படித்து வந்தார். இந்த பள்ளியில் கழிவறை அருகே செப்டிக் டேங் அமைக்கப்பட்டிருந்தது. …

High Court: இலங்கையில் இருந்து தமிழகம் வந்த பெண்ணின் தாலிக்கொடியை பறிமுதல் செய்த சென்னை சுங்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த தனுஷிகா என்ற பெண் கடந்த 2023ல் ஜெயகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதையடுத்து, கணவர் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றநிலையில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் வழிபாடு நடத்த, தனுஷிகா, இலங்கையில் இருந்து …

நீலகிரி வரும் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அந்த பேருந்தையே பறிமுதல் செய்ய வேண்டும். பேருந்தின் உரிமத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும். இப்படி கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சுற்றுலா தலங்களான நீலகிரி மற்றும் கொடைக்கானலில் …

தமிழக அரசின் உள்துறை செயலாளர் இன்று மாலை 4.30 மணிக்குள் நேரில் ஆஜராகவில்லை என்றால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என்று உயர்நீதிமன்றம் நீதிபதி எச்சரித்துள்ளார். கொலை மிரட்டல் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் செய்வதாகத் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் உள்துறை செயலாளர் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க …

தனுஷ் வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் தனுஷ் தயாரித்த ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இதற்கு ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் …

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை பிப்ரவரி 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவினர் 7 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி …