அமெரிக்கா, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , ரஷ்யாவுக்கு எதிரான இரு கட்சிகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள ரஷ்யா மீதான தடைகள் மசோதா (Russia Sanctions Bill) என்ற சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா அமலுக்கு வந்தால், ரஷ்யாவுடன் தெரிந்தே எண்ணெய் மற்றும் எரிசக்தி வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு […]
China
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் (Balochistan) பகுதியில் சீனா தனது இராணுவத்தை விரைவில் நிலைநிறுத்தக்கூடும் என பாலூச் தலைவரான மிர் யார் பலூச் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கருக்கு அவர் ஒரு திறந்த கடிதம் எழுதியுள்ளார். புத்தாண்டு தினமான ஜனவரி 1 அன்று ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிடப்பட்ட அந்த கடிதத்தில், சீனா – பாகிஸ்தான் கூட்டணி பலூசிஸ்தான் மக்களுக்கும் அந்தப் பிராந்தியத்திற்கும் நேரடி அச்சுறுத்தலாக மாறியுள்ளது […]
தொழில், அரசு மற்றும் சமூக தளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தலைமையிலான மாற்றங்கள் உலகம் முழுவதும் வேகமெடுத்து வரும் நிலையில், உலகளாவிய AI Vibrancy Index பட்டியலில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது.. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்த அறிக்கை, AI துறையில் உலகளவில் கடும் போட்டி நிலவுகிறது என்பதையும், அந்தப் போட்டியில் […]
சமூக ஊடகங்களில் வேகமாக பரவும் ஒரு வீடியோவில், ஒரு பெண் 10-ஆம் மாடி பால்கனியில் தொங்கியடி, தப்பி ஓடுவது போன்ற காட்சி தெரிகிறது. இதை பார்த்தால் இதயத்துடிப்பு கூட அதிகரிக்கிறது. இந்த சம்பவம் சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. வீடியோவில், சட்டையில்லாத ஒரு ஆண் ஜன்னல் வழியாக அந்த பெண்மணியிடம் பேசியதை காணலாம். சில நொடிகளில் அவர் காட்சியில் இருந்து மறைந்துவிடுகிறார். இந்த சம்பவம் நவம்பர் 30-ஆம் தேதி […]
அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்தியப் பெண் ஷாங்காய் விமான நிலையத்தில் தங்கியிருந்தபோது அவமதிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம், அந்தப் பெண்ணுக்கு நடத்தப்பட்ட குடிவரவு சோதனைகள் சீனாவின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு முற்றிலும் உட்பட்டே நடந்ததாக தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் மாவ் நிங், ” இந்தியா “அருணாசலப் பிரதேசம்” என்று அழைக்கும் பகுதியைப் பற்றி சீனாவின் நிலைப்பாட்டை மீண்டும் கூறினார். மேலும் […]
அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களைப் படிக்க அனுமதிப்பது நாட்டின் கல்வி முறைக்கும் பொருளாதாரத்திற்கும் நன்மை பயக்கும் என்றும், அதைக் கட்டுப்படுத்துவது தீங்கு விளைவிக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். இதுகுறித்து ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி செய்வதில் வெளிநாட்டு மாணவர்களின் பங்கு முக்கியமானது. சர்வதேச மாணவர் சேர்க்கையைக் குறைப்பது பரவலான கல்லூரி மூடல்களுக்கும், பொருளாதார இழப்புக்கும் வழிவகுக்கும். […]
வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், நவம்பர் 1 முதல் 155% வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவை எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் சீனாவிற்கு கடுமையான பொருளாதார எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், சீனா 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் கூறினார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுடனான வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் […]
பிலிப்பைன்சின் வடக்கு பகுதியில் ககாயன் மாகாணம் அருகே “ரகசா” என்ற புதிய புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் அங்குள்ள லூசோன் நகரில் இன்று மதியம் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் காற்று வீசி மழை பெய்வதால் முன்னெச்சரிக்கையாக 10,000க்கும் மேற்பட்ட மக்கள் பள்ளிகள் மற்றும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலத்த மழை மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என வானிலை ஆய்வு […]
From gym to school.. the world’s largest building, home to 30,000 families..!! Do you know where it is..?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை சீனா மற்றும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டுள்ளார். சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் நடைபெறும் 23 நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் சட்டவிரோத மருந்துகள் மற்றும் அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை உற்பத்தி செய்து கடத்துவதன் மூலம் அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் கூறினார். கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 15) அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதிபர் […]

