பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் அட்டைகாரர்களுக்கு ரூபாய் 5000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என்று இந்த ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடித்து கொண்டுள்ளனர். ஏழையின் வயிற்றில் அடிப்பது மட்டுமல்ல, ஏழைகளுக்கு உணவளிக்கும் விவசாயிகளையும் நடுத்தெருவில் நிறுத்தி வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் தைத்திருநாளுக்கு பொங்கல் பரிசாக ரொக்கம் மற்றும் செங்கரும்புடன் கூடிய […]

சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையை மத்திய அரசு திடீரென ரத்து செய்துள்ளதை கைவிட்டு மீண்டும் வழங்கிட வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், 29-11-2022 நாளிட்ட மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் கடிதத்தில், கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயத் தொடக்கக் கல்வி (1 முதல் 8 -ம் வகுப்பு வரை) வழங்குவதை அரசாங்கம் […]

மதுரை மாவட்டத்தில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மதுரை நகரில், குழாய் பதிக்கும் பணியில் மூன்று பணியாளர்கள் ஈடுபட்டிருந்தபோது அதே இடத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாய் வெடித்ததால் அவர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த இடம் நிலத்தில் புதைந்துள்ளது. இச்சம்பவத்தில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சக்திவேல் (வயது 30) […]

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களுடைய 2 விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்; தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 5.11.2022 அன்று கைது செய்யப்பட்டுள்ளது குறித்தும், அவர்களது இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு […]