சொத்துக்கள் பாகப்பிரிவினை வழக்குகள் அனைத்தும் ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சொத்துக்கள் பாகப்பிரிவினை என்பது ஒரு குடும்பத்தின் சொத்துக்களை, சட்டப்பூர்வமான வாரிசுகளுக்கு இடையே பிரித்து வழங்கும் முறையாகும். இது பொதுவாக குடும்பச் சொத்துக்களுக்குப் பொருந்தும், மேலும் இது ஒரு உடன்படிக்கை பத்திரம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் பாகப்பிரிவினை தொடர்பான வழக்குகள் அதிகமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. […]

தமிழக மீனவர்கள் 8 பேருக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதித்தும், 16 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு செய்தும் இலங்கையின் மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவம் குறைந்துள்ளது. மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. மேலும், மீனவர்களின் […]

அரசியல் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து மக்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் […]