பிரபல நடிகர் ஃபிஷ் வெங்கட் உடல்நலக்குறைவால் காலமானார். சிறுத்தை, மதராஸி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் ஃபிஷ் வெங்கட் உடல்நலக்குறைவால் காலமானார். ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்ட இவர், கடந்த சில தினங்களாகவே சிறுநீரக பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நள்ளிரவில் அவர் உயிர் பிரிந்தது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மீன் வியாபாரம் செய்ததால் ஃபிஷ் வெங்கட் என அழைக்கப்பட்டார். வெங்கட்டின் உடல்நிலை குறித்து தெரிய […]

அருப்புக்கோட்டை அருகே மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பழனி நோக்கி சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. அருப்புக்கோட்டையில் மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் பாலையம்பட்டி பகுதியில் அதிகாலை 5 மணியளவில் கண்டெய்னர் லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நெர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 2 லாரி டிரைவர்கள் உட்பட […]

சிவகாசி அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (06.07.2025) காலை சுமார் 8.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், […]

திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசியுடன் நேரடி தொடர்பு உள்ளதற்கான எந்த ஆதாரமும் இல்லை என மருத்துவ ஆராய்ச்சி இந்திய கவுன்சில், நோய் கட்டுப்பாட்டு தேசிய மையம் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து என டாக்டர் முர்ஹேகர் தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிடத்தக்க சமீபத்திய ஆய்வை சுட்டிக்காட்டிய டாக்டர் முர்ஹேகர், இளைஞர்களிடையே திடீர் இதய இறப்புகள் பற்றி அதிகரித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டில் ஐசிஎம்ஆர்-என்ஐஇ நடத்திய விரிவான ஆய்வைக் குறிப்பிட்டு, கொரோனா தடுப்பூசிகளுக்கும் திடீர் […]

தமிழகத்தில் வரதட்சிணை அழுத்தங்களால் புதுமணப் பெண்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த பன்னீருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, பெண் வீட்டார் 5 சவரன் நகை வழங்குவதாக வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் 4 சவரன்தான் வழங்கப்பட்டதையடுத்து மீதமுள்ள 1 சவரனை வாங்கி வருமாறு புதிய மனைவிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மன அழுத்தத்தை தாங்க […]

தெலுங்கானாவின் சங்காரெட்டியில் உள்ள சிகாச்சி குளோரோ கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 35 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடி விபத்து நடந்த தொழிற்சாலைக்குள் 61 பேர் சிக்கியிருந்துள்ளனர். 11 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை கட்டுக்குள் கொண்டு […]

பேருந்து மீது லாரி மோதி கோர விபத்திற்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டின் மினொபியா மாகாணம் அர்ப் அல் சன்பாசா கிராமத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 22 தொழிலாளர்கள் பயணம் செய்தனர். நேற்று காலை இந்த பேருந்து அஷ்மொன் பகுதியில் சென்ற போது சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி, பேருந்து மீது மோதியது. இந்த கோர விபத்தில் […]