fbpx

தமிழ்நாட்டை மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34-ஐ தொட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதாக 109 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு …

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் சிலர் கும்பலாகச் சென்று கள்ளச்சாராயம் அருந்தி இருக்கிறார்கள். இதில் 6 பேர் உடல்நிலை பாதிப்புக்கு ஆளானதாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் கணேசன் மகன் பிரவீன்(29), தர்மன் மகன் சுரேஷ் (46), சேகர், ஜெகதீசன் ஆகிய 4 …

விருதுநகரில் மூதாட்டியை பேனாவால் குத்தி கொலை செய்த பொறியியல் பட்டதாரி இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் என தெரியவந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமமூர்த்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் வேலம்மாள் (71). இவரது கணவர் உயிரிழந்த நிலையில் இவர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், …

உத்தரகாண்ட் அடுத்த ரிஷிகேஷ் – பத்ரிநாத் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 12 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். 

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் அருகே 17க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வேனில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், அலகனந்தா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிராவலரில் சுமார் 17 பயணிகள் இருந்த …

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில், பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் உயிரிழந்தார்.

சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மரில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தகவலின்பேரில் அப்பகுதியில் 4 மாவட்டங்களில் போலீஸார் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும், நக்கல்களுக்குமிடையே …

குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தடைந்தது.

குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வந்தனர். கடந்த 13ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அக்கட்டடத்தில் திடீரென தீப்பற்றியது. இந்த தீவிபத்தில் தற்போது வரை 43 இந்தியர்கள் …

லேப்டாப் சார்ஜ் செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் விருதுநகரில் 22 வயதான பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சொக்கநாதன்புத்தூர், கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்தி குமார். இவரது மனைவி சிவகாமி. இவர்களது மகள் செந்திமயில். பி.எஸ்.சி பட்டதாரியான செந்திமயிலுக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த …

குவைத்தில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த, 45 இந்தியர்களின் உடல் விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடான குவைத்தில் உள்ள மங்காப் நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். விசாரணையின் …

சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவிலிருந்து குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு ஏமன் கடற்கரையில் மூழ்கியதில் குறைந்தது 49 பேர் உயிரிழந்தனர், மேலும் 140 பேரைக் காணவில்லை என்று ஐநாவின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இறந்த புலம்பெயர்ந்தவர்களில் 31 பெண்களும் ஆறு குழந்தைகளும் இருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோமாலியாவின் வடக்கு கடற்கரையிலிருந்து சுமார் 260 சோமாலியர்கள் மற்றும் …

பானிபூரி சாப்பிட்டு 17 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பானிபூரி பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேத்தூர் ஊராட்சி அய்யனார் புரத்தை சேர்ந்தவர் வெள்ளி மகன் வேலு. இவர், 10ஆம் வகுப்பு வரை படித்து விட்டு கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 7ஆம் தேதி இரவு அய்யனார்புரம் அருகே …