தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். சித்த மருத்துவத்துக்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு 25 ஏக்கர் நிலம் மாதவரம் பால்பண்ணை பகுதியில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ரூ.2 கோடியில் அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான மசோதா, கடந்த 2022-ம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் செயல்படுவார் […]

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுக்கள் குளிர்காலத்திற்கு முன்பு கொடிய தாக்குதல்களைத் திட்டமிடுவதாக இந்திய உளவுத்துறை அமைப்புகள் ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளன. இதனால் ஜம்மு காஷ்மீர், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்திற்கு உளவுத்துறை அமைப்புகள் உயர் மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளன. டெல்லி குண்டுவெடிப்பு குறித்து நடந்து வரும் விசாரணைகளுக்கு மத்தியில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல பயங்கரவாத முகாம்களை […]

உலகின் சிறந்த நகரங்களின் புதிய உலகளாவிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது, மேலும் லண்டன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் உலகளாவிய மாற்ற சகாப்தத்தின் மத்தியில், ரியல் எஸ்டேட், சுற்றுலா மற்றும் பொருளாதார மேம்பாட்டில் ஆலோசகரான ரெசோனன்ஸ் கன்சல்டன்சி மற்றும் அதன் ஆராய்ச்சி கூட்டாளியான இப்சோஸ் ஆகியவை 2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நகரங்களை உலகளவில் 100 நகரங்களை தரவரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளன. Resonance Consultancy மற்றும் […]

146 கோடி பேருடன் இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. இந்தநிலையில், 2025 இல் உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. ஐ க்கிய நாடுகள் சபையின் உலக நகரமயமாக்கல் வாய்ப்புகள் 2025 அறிக்கையின்படி, பட்டியலில் முதல் பத்து நகரங்களில் 4 இந்திய நகரங்களும் இடம்பெற்றுள்ளன. அதன்படி ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 27,000 பேர் வசிக்கும் […]

டெல்லி வெடி குண்டு சம்பவத்திற்கு உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‘மோடி-அமித்ஷா-அம்பானி’ கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்..? என எம்.பி திருமாவளவன் கூறியுள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது […]

டெல்லி செங்கோட்டை அருகே ஒரு காரில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு, கடந்த இரண்டு தசாப்தங்களாக டெல்லியில் நடந்த குண்டுவெடிப்புகளை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது. திங்கட்கிழமை i20 காரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இதுவரை எட்டு பேர் இறந்துள்ளனர் மற்றும் 24 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 14 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள், நான்கு பேர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 28 ஆண்டுகளில் டெல்லி எப்போது குண்டுவெடிப்புகளால் அதிர்ந்தது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். 1997 க்குப் […]

டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் புல்வாமா தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. திங்கள்கிழமை மாலை (நவம்பர் 10) டெல்லியில் வெடித்த கார் புல்வாமாவைச் சேர்ந்த தாரிக் என்பவருக்கு விற்கப்பட்டதாக ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து, செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் ஹூண்டாய் ஐ20 கார் வெடித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். […]

டெல்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிப்பு சம்பவத்தில் பல அப்பாவிகள் பலியானதை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் உண்மையிலேயே மனதை உடைக்கின்றன. துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயங்களுடன் போராடுபவர்கள் வலிமை பெறவும், விரைவில் குணமடையவும் […]

தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையம் முதலாவது நுழைவு வாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.. சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக […]

டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ முதலாவது நுழைவு வாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் இன்று பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.. மிகுந்த சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டு தீ பரவியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.. இரு கார்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததால் தலைநகரில் பதற்றம் நிலவுகிறது.. செங்கோட்டை அருகே தீப்பிழம்புடன் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக நெரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.. செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு […]