இந்தியாவின் சாலைகள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கி வருகின்றன. சில நகரங்கள் மிகப்பெரிய அளவிலான இறப்புகளுக்கு தனித்து நிற்கின்றன. டெல்லி, பெங்களூரு, ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத் ஆகியவை வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தானவையாக உருவெடுத்துள்ளன. அதிக வேகம் மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் ஆகியவை முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டில், அகமதாபாத்தில் சாலை விபத்துகள் காரணமாக 535 இறப்புகள் பதிவாகியுள்ளன. எனவே இந்த […]

தலைநகர் டெல்லி காற்றில் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகள் இருப்பது சுகாதாரத்தை அச்சுறுத்துகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் காற்றில பரவும் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளால் நுரையீரல் வாய் மற்றும் தோலில் தொற்றுநோய் ஏற்படுவதாக போஸ் ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அட்மாஸ்பெரிக் என்விரான்மென்ட் : X என்ற சர்வதேச இதழில், இதற்கான ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இது நகர்ப்புற சுகாதாரத் திட்டமிடலுக்கு விழிப்புணர்வாக […]

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இயந்திரத்தில் தீப்பிடித்ததால் ஏர் இந்திய விமானம் டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். டெல்லியில் இருந்து இந்தூர் செல்லும் ஏர் இந்தியா விமானம் AI2913 புறப்பட்ட சிறிது நேரத்திலேயே டெல்லிக்குத் திரும்பியது. விமானத்தின் காக்பிட் குழுவினருக்கு வலதுபுற எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதாக ஒரு சமிக்ஞை கிடைத்தது, அதன் பிறகு நிலையான நடைமுறையின்படி இயந்திரம் நிறுத்தப்பட்டு விமானம் உடனடியாக டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாக […]

டெல்லியில் மாதவிடாய் தள்ளிப்போகும் ஹார்மோன் மாத்திரையை எடுத்துக்கொண்ட 18 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் 18 வயதுடைய இளம்பெண், மாதவிடாய் தள்ளிப்போகும் ஹார்மோன் மாத்திரைகளை உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு deep vein thrombosis என்ற ஆழமான நரம்பு ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவர் மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரைத்தார், ஆனால் அவரது தந்தை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த சிறுமி […]

துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வைகோ, திருமாவளவன், கமல்ஹாசன், முத்தரசன், ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் மற்றும் திமுக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து […]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளைப் பிரதமர் இன்று திறந்து வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட 184 குடியிருப்புகளைக் கொண்ட வகை-VII பல மாடி அடுக்குமாடி குடியிருப்பை, புது தில்லியில் உள்ள பாபா கரக் சிங் (பி.கே.எஸ்) மார்க்கில், இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது, பிரதமர் குடியிருப்பு வளாகத்தில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நினைவு கூரும் வகையில் மரக்கன்று ஒன்றை நடவுள்ளார். […]