அமலாக்கத்துறை விசாரித்து வரும் நேஷ்னல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றம் தடுப்பு பிரிவு காவல்துறை வழக்கு பதிவு. அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரின் புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்தனர். கடந்த 2008-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மூடப்பட்டபோது அதை நடத்திய அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 90 கோடி […]

டெல்லி வெடி விபத்து சம்பந்தமாக டெல்லி காவல்துறையினர் சட்டவிரோத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து […]

தீபாவளிக்கு திட்டமிடப்பட்டிருந்த ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை முறியடித்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. தெற்கு டெல்லியில் பிரபலமான ஒரு வணிக வளாகம் மற்றும் ஒரு பொது பூங்கா உட்பட தேசிய தலைநகரின் அதிக மக்கள் கூடும் பகுதியில் குண்டுவெடிப்புகளை நடத்தத் தயாராக இருந்ததாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை அவர்கள் கைது செய்தனர். அட்னான் என்ற இருவர் டெல்லி மற்றும் போபாலில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் […]

டெல்லியின் வசந்த் குஞ்சில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஆன்மீக மற்றும் கல்வி நிறுவனத்தில் நீண்டகாலமாக நடந்து வந்த பாலியல் தொல்லை தொடர்பான அதிர்ச்சியூட்டும் வழக்கு இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தன்னை ஒரு துறவி, ஆசிரியர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என்று கூறிக் கொள்ளும் 60 வயதான சைதன்யானந்தா உண்மையில் காமக் கொடூரனாக இருக்கிறார்.. ஆன்மீகம், கல்வி மற்றும் மதிப்புகள் பற்றிப் பேசிய இந்த சாமியார் அவமானத்தின் அடையாளமாக மாறிவிட்டார். கண்காணிப்பு […]

டெல்லியில் ஓய்வுபெற்ற வங்கியாளரான 78 வயதான நரேஷ் மல்ஹோத்ரா, தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.23 கோடியை சைபர் குற்றவாளிகளிடம் இழந்தார்.. அவர் “டிஜிட்டல் கைது” செய்யப்பட்டார். ஆகஸ்ட் 4 ஆம் தேதி மும்பை காவல்துறை அதிகாரி என்று கூறிக் கொள்ளும் ஒருவரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தபோது இந்த மோசடி தொடங்கியது. இது செப்டம்பர் 4 ஆம் தேதி வரை தொடர்ந்தது, அதன் பிறகு மோசடி செய்பவர்கள் அவரைத் தொடர்பு கொள்வதை […]

மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சைதன்யானந்த சரஸ்வதி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லியில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தின் மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து, பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படும் சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் அவரை தீவிரமாக தேடி வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சாமியர்வர் தலைமறைவாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. வசந்த் குஞ்ச் […]