இந்தியாவில் வயதானோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், டிமென்ஷியா (ஞாபக மறதி நோய்) தடுப்பு, ஆரம்பகட்ட கண்டறிதல் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான ஆதரவு ஆகியவற்றை பொது சுகாதாரத் திட்டங்களில் முக்கிய பகுதியாக இணைக்க வேண்டும் என மருத்துவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர். டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘Hope for Dementia Conclave 2026’ நிகழ்ச்சியில் இதுகுறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. டிமென்ஷியாவுடன் வாழும் நபர்கள் மற்றும் அவர்களது […]