மக்கள் தீர்ப்பல்ல; அதிகாரப் படுகொலை! ரீல்ஸ் ஆட்சியில் மயங்கி விழுந்த ஓட்டுகள்! முதல்வர் விஜயை கடுமையாக சாடிய இபிஎஸ்!

eps cm vijay

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது: “தவெகவின் இந்த வெற்றி என்பது பண பலத்திற்கும், அதிகார பலத்திற்கும் கிடைத்த அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையே தவிர மக்கள் அளித்த தீர்ப்பல்ல” என்று சாடியுள்ளார்.


தோல்வி பயம் காரணமாக ஒட்டுமொத்த அமைச்சரவையையும் களத்தில் இறக்கி, வாக்காளர்களுக்கு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசியும், அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து அச்சுறுத்தியும் குறுக்கு வழியில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அரை மணி நேரம் பேசினாலே கொத்துப் புரோட்டா போட்டுவிடுவேன் என்று வீர வசனம் பேசிய முதல்வர் விஜய், தோல்வி பயத்தில் தெருத்தெருவாக அலைந்து விசில் ஊத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தேர்தல் நடத்தை விதிகளை முற்றிலுமாக புறந்தள்ளி, அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்திப் பிரச்சாரம் செய்ததோடு, ஒரு குற்றவாளியுடன் ரேக்ளா மாட்டு வண்டியில் வலம் வந்துள்ளார்.

மேலும், “அதிமுகவை தீர்ந்துபோன சக்தி என்றும் ‘மற்றும் பலர்’ என்றும் கேலி செய்தவர்களுக்கு இந்த இடைத்தேர்தல் மரண பயத்தை காட்டியுள்ளது. அதிமுக கோட்டைக்குள் நுழைந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு இந்த தற்காலிக வெற்றியை வைத்து அதிமுகவை அழித்துவிடலாம் என்று யாரும் கனவு காண வேண்டாம்” என்று கூறினார்.

ரீல்ஸ் ஆட்சியில் ரீல்ஸ்களில் மயங்கி மக்கள் வாக்களித்திருந்தாலும், அதிமுக ஆட்சி அமைய வாய்ப்பில்லை என்பது தெரிந்தும் இரு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு மக்கள் கணிசமான வாக்குகளை வழங்கியுள்ளதாகவும், தான் முதல்வராக இருந்த காலத்தில் சந்தித்த எத்தனையோ சோதனைகளைப் போல இந்த அரசியல் பின்னடைவையும் கழகம் நிச்சயம் முறியடிக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Read More :

BREAKING | தமிழகம் ஊழல்வாதிகளின் கோட்டை இல்லை! பணநாயக சூத்திரத்தை அடித்து நொறுக்கிய தேர்தல்! வெற்றிக்கு பின் கர்ஜித்த முதல்வர் விஜய்!

துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! அதிகார பலம்.. ஜி-பேவில் பணம்! தவெக வெற்றியை விளாசிய ஸ்டாலின்!

Next Post

கதம் கதம்.. முடிஞ்சது! அமைச்சர்களுடன் இணைந்து முதல்வர் விஜய் செய்த தரமான செய்கை!

Fri Oct 9 , 2026
பெரும் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா, மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியை அடுத்து சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் திரண்டு பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை […]
CM Vijay 2026

You May Like