முன்னாள் எம்எல்ஏ இளமதி சுப்பிரமணியத்தை தஞ்சை மேற்கு மாவட்ட இணைச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி விடுவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டனர். அதுமட்டுமின்றி கூட்டணி விவகாரம் சீட்டு வழங்குவது தொடர்பான விவாதங்கள் ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் ஏழு கட்சிகள் உறுதியாக நிற்கின்றன. அதேநேரம் அதிமுக கூட்டணியில் இப்போது பாஜக மட்டுமே இணைந்துள்ளது. பாமக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற […]

2026 தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, நாகை ஆகிய சட்டசபை தொகுதிகளில் இன்று மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தை மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி; ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வீடு வீடாக சென்று கட்சியில் சேர சொல்லி […]

2026 சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமி படுதோல்வி அடைவார் என நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பயணம் போய்க் கொண்டிருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினம் தினம் கேலிக் கூத்துகளை அரங்கேற்றி நெட்டிசன்களுக்கு ட்ரோல் மெட்டிரியல் ஆகிக் கொண்டிருக்கிறார். ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பைத் தயவு செய்து மாற்றிவிடுங்கள் […]

திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதற்கு பதிலடியாக அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பலர் இரவோடு இரவாக திமுகவில் இணைந்தனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பேரத்தை தொடங்கிய நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தான் நிலைக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின், கட்சியிலும் […]

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியே வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றிபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்; அதிமுக பாஜகவுடன் உறவில் இருந்த நிலையில், இனி பாஜகவுடன் சேர போவதில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்தார். இப்போது மீண்டும் பாஜகவுடன் இணைந்திருக்கிறார். அப்படி இணையவேண்டிய கட்டாயம் என்ன? பாஜக […]

நாங்க யாருடன் வேணும்னாலும் கூட்டணி வைப்போம் என்றும் ஸ்டாலின் ஏன் நடுங்குகிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இப்போதே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த […]

விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து ஆண்டு கணக்கில் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக ஆட்சிக்கு வந்த போது தமிழகத்தில் விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு விண்ணப்பித்து 4.50 லட்சம் விவசாயிகள் காத்திருந்ததனர். விவசாயிகளுக்கு 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்போவதாக அறிவித்த திமுக அரசு […]