மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகும் குறுவைத் தொகுப்பு அறிவிக்காதது ஏன்…? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், குறுவை சாகுபடிக்கான குறுவைத் தொகுப்புத் திட்டம் இன்று வரை அறிவிக்கப்படவில்லை; நெல்லுக்கு முதலமைச்சர் அறிவித்துள்ள கொள்முதல் விலையும் உழவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. […]
Dmk
While Amit Shah criticized the DMK government for not implementing any projects, Chief Minister Stalin responded with a dialogue.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக்கூடும் என தகவல் வெளியாகி வருகிறது. ராஜ்யசபா தேர்தலில் வைகோவுக்கு இடம் கொடுக்காததால், மதிமுக அதிருபதியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன், வாஜ்பாய் அரசில் இருந்த தமிழக கட்சி […]
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் 11.06.2025 மற்றும் 12.06.2025 ஆகிய நாள்களில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக இன்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 11 கி.மீ. ரோடு ஷோவில் பங்கேற்கிறார். 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்து வைக்கிறார். முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக சேலத்துக்கு இன்று வருகிறார். காலை 10 […]
தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றிபெற முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்தார். பெரம்பலூரில் மாவட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்; கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகள் கேட்பது இயல்பு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளது போல, நாங்களும் இந்த முறை திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்போம். […]
நாமக்கல் மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் மூதாட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளையும் பாதுகாப்பாக கடப்பதே அக்னிப் பரீட்சையாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மறைந்த சாமியாத்தாள் […]
திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வரும் மாபெரும் திட்டங்களால் தமிழகம் அதிவேகமாக நகரமாயமாகி சிறந்த மாநிலமாக திகழ்வதாகவும், திமுக அரசின் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது என தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் நிறைவேற்றி வரும் பல்வேறு திட்டங்கள் காரணமாக தமிழகம் விரைந்து நகரமயமாகி வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி […]
தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்ய தென் மாவட்ட அளவிலான பாஜக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார். இதை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு […]
மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க திமுக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக தேர்தல் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து, மாவட்ட வாரியாக கருத்துகளை கேட்டது. தொடர்ந்து 8 மண்டலங்களாக பிரித்து, மண்டல […]
கோவில் திருவிழாவுக்கு அதிகளவில் கூட்டம் செல்வதும் உண்மையிலேயே நாகரீகமான சமூகத்திற்கு ஒரு நல்ல அடையாளமாக என்னால் பார்க்க முடியாது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். மேலும் பொது இடங்களில் கூடும் போது, பொதுமக்கள் நம்முடைய அறிவினை பயன்படுத்தி முண்டியடித்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களின் இந்த கருத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து […]

