கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் வரும் 25, 26-ம் தேதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பில் ரூ.208.50 கோடியில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. வரும் 25-ம் தேதி இப்பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். மேலும், அன்று மாலை கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தொழில் துறை […]

திருவள்ளூர் தொகுதி திமுக MLA வி.ஜி.ராஜேந்திரனின் உதவியாளரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளருமான நேதாஜி திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சாலை அமைப்பது உள்ளிட்ட அரசு ஒப்பந்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், கட்சியிலிருந்து நீக்கி துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் மீண்டும் திமுக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முறையில் முதல்வர் ஸ்டாலின் […]

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையில் உருவாக்கியுள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் இக் கூட்டணியில் கடந்த 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஒரு சில கட்சிகள் இன்னும் இணையாமல் இருக்கின்றன. அந்தக் கட்சிகளையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கொண்டு வருவதற்கான […]

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான பொள்ளாச்சி ஜெயராமன் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் ‘உடன்பிறப்பே வா’ எனும் பெயரில் திமுக நிர்வாகிகளை தொகுதி வாரியாக அறிவாலயத்தில் சந்தித்து பேசி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இதுவரை 86 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ‘ஒன் டு ஒன்’ சந்தித்து நேரடி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது, முன்வைக்கப்படும் […]

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் […]

பாஜகவுடன், கூட்டணியில் உள்ள எந்த கட்சியோடும் கூட்டணி வைக்க 1% கூட வாய்ப்பு இல்லை என தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; எஸ்ஐஆரால் தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் உள்ளது. இதனால்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தவெக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினோம். இதுபற்றி தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே தவெக போராட்டம் […]

தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு சென்ற ரூ.1720 கோடி முதலீடு.. தமிழ்நாட்டுக்கு ரூ.11.32 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து விட்டோம்; அதன் மூலம் 34 லட்சம் பேருக்கு வேலை கிடைத்து விட்டது என்றெல்லாம் திமுக கூறி வந்தது பொய் என்பது அம்பலமாகியுள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் ரூ.1720 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் […]

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளுடன் கூடிய மருத்துவ மனைகள் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா முடிகொண்டானைச் சேர்ந்த என்.ராஜசேகரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: கடந்த அதிமுக ஆட்சியில் ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், அரியலூர், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், […]