மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களை பார்வையிட அமைச்சர் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; கடந்த சில நாட்களில் தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர் …