இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான மேற்கு சுமத்ராவில் இன்று அதிகாலை 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி வர வாய்ப்பு உள்ளதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என்று வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஜகார்த்தா நேரப்படி செவ்வாய்கிழமை அதிகாலை 03:00 மணிக்கு ஏற்பட்டது, இந்த நிலநடுக்கம் மென்டவாய் தீவுகள் மாவட்டத்தில் வடமேற்கே 177 கிமீ தொலைவில் மற்றும் கடலுக்கு அடியில் 84 கிமீ ஆழத்தில் […]
earthquake
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று மதியம் முதல் அடுத்தடுத்து 6-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் நேற்று மதியம் 1.19 மணியளவில் 4.9 ரிக்டர் அளவில் பதிவானது. இரண்டாவது முறையாக மதியம் 2.59 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து மாலை 4.01 மணியளவில் மூன்றாவது முறையாக அந்தமான் நிக்கோபார் தீவின் கடல் பகுதியில் 5.3 ரிக்டர் […]
சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு போலி செய்திகள் பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி வைரலாகி வருகிறது.. டெல்லியில் அடுத்த மாதம் 9.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் என்று வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி பரவுகிறது. அந்த செய்தியில் “ ஏப்ரல் முதல் வாரத்தில் தேசிய தலைநகர் டெல்லியில் 9.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. கடந்த வாரம் டெல்லி-என்சிஆர் உட்பட வட […]
டெல்லி போன்ற வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை ரிக்டர் 6.8 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் மலைத்தொடர் பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உணரப்பட்ட நிலநடுக்கத்தின் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. முக்கியமாக டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் போன்ற வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனையடுத்து பீதியில் வீடுகளை விட்டு வெளியே […]
தெற்கு ஈக்வடார் மற்றும் வடக்கு பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 15 பேர் உயிரிழந்தனர். ஈக்வடார் நாட்டின் 2வது பெரிய நகரமான குயாகுவில் நகருக்கு தெற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் பசிபிக் கடற்கரையை மையமாகக் கொண்டு சுமார் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.. இந்த நிலநடுக்கத்தில் 14 […]
நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்று 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அந்நாட்டு […]
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் இன்று அடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.. உத்தரகாசியில் இன்று அதிகாலை 2.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இரண்டு தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி தேவேந்திர பட்வால் தெரிவித்தார். நள்ளிரவு 12.45 மணியளவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்தின் மையம், மாவட்டத்தின் பத்வாரி பகுதியில் உள்ள சிரோர் வனப்பகுதியில் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.. இதை தொடர்ந்து அடுத்தத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.. […]
ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் வடக்குப் பிரதான தீவான ஹொக்கைடோவில் நேற்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது நாட்டின் நில அதிர்வு தீவிரம் அளவுகோலான 7 இல் 5 ஆக குறைந்தது என்று தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் வடக்கு தீவில் உள்ள நெமுரோ தீபகற்பத்தை 61 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியது என்று ஜப்பானின் புவி அறிவியல் மற்றும் பேரிடர் தாங்கும் தேசிய ஆராய்ச்சி […]
சீனாவின் எல்லைக்கு அருகில் தஜிகிஸ்தானில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சீனாவின் தொலைதூர மேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்திற்கு அருகிலுள்ள கிழக்கு தஜிகிஸ்தானில் இன்று 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67 கிலோமீட்டர் தொலைவிலும், 20 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமிர் மலைகளில் சில ஆயிரம் மக்கள் வசிக்கும் மாவட்ட தலைநகரம் […]
துருக்கியில் இரண்டு புதிய நிலநடுக்கம் ஏற்பட்டதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். துருக்கியின் தெற்கு ஹடாய் மாகாணத்தில் ஏற்பட்ட இரண்டு புதிய நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 213 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்துள்ளார். மூன்று இடங்களில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அண்டை நாடான சிரியாவிலும் […]