ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, எல்லையோர மாவட்டமான பூஞ்சில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோரை இழந்த 30 குழந்தைகளை தத்தெடுத்த ராகுல்காந்தி, அவர்களின் கல்வி மற்றும் பராமரிப்பு செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளார். ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் எல்லையைத் தாண்டி பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது இந்திய ஆயுதப் படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் […]

சென்னையில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைப்பாலினர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்கும். எனவே, தொழிற்கல்வி, பட்டம், பட்டயம், பொறியியல், மருத்துவம் மற்றும் அதனை சார்ந்த படிப்பு, சட்டம், முதுகலை, முனைவர் ஆகிய உயர்கல்விக்கு இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உயர்கல்வியைத் தொடர […]

தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு ஜூலை பருவத்துக்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் தொடங்கப்பட்டுள்ளது. கலை, அறிவியல், வணிகம், இதழியல் மற்றும் மக்கள்தொடர்பு, சட்டம், கல்வி, மேலாண்மை, சமூக அறிவியல், தொழில்சார் படிப்புகளில் சேர […]