31 வருடங்கள் தமிழகத்தில் ஆட்சி புரிந்த, பொன் விழா கண்ட அதிமுகவை பாஜக மட்டும் அல்ல எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி ஆவேசமான உரையாற்றினார். அந்த உரையில், “அதிமுக முடிந்துவிடும்” என மு.க. ஸ்டாலின் பேசுவது வெறும் பகல் கனவு எனக்கூறி அவர் கடுமையாக தாக்கினர். “நாட்டை காக்க […]

எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆங்கில நாள்தழுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என்று மீண்டும் உறுதிபட தெரிவித்தார். அதிமுகவில் பிரிந்து சென்ற யாரையும் ஒன்றிணைக்கவில்லை என்றும், அவர்கள் கட்சி விவகாரத்தை அவர்களே பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டில் தேசிய […]

ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார், அஇஅதிமுக-வைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள பொம்மை முதலமைச்சர், […]

உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக நிர்வாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே கொல்லம்பரம்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன். அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் கணவர் ஆவார். இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். உள்ளாட்சித் தேர்தலில் முன்விரோதம் காரணமாக முத்து பாலகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த […]

2026 தேர்தலில் விசிகவுக்கு அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகள் ஒதுக்கத் தயார் என இபிஎஸ் தூது விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகியான வைகை செல்வன் சந்தித்து கொண்டனர். அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கப்பட்டு 2 மாதங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், இரு கட்சியின் நிர்வாகிகளும் தங்களது கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் என்று கூறி வருகின்றனர். […]

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், திமுக, நாதக, அமமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500 பேர் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு அதிமுக அடையாள அட்டை வழங்கி, தேர்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல திமுகவை சேர்ந்த பலர் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் […]

உட்கட்சி, கூட்டணி பிரச்சனைகளையும் மறைப்பதற்காக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரைவேக்காட்டு தனமான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தஞ்சையில் அரசு சார்பில் நடந்த நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது தஞ்சை மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார். மேலும் “ தஞ்சை மக்களுக்காக திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. தஞ்சை மண்ணில் ஒவ்வொரு […]

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடங்களுக்கான வேட்பு மனுத்தாக்கலுக்காக, தமிழக சட்டப்பேரவை செயலக கூடுதல் […]

அதிமுக மூத்த நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஆதரவில் முதலமைச்சராக்கப்பட்ட பழனிசாமி, சசிகலா சிறைக்கு சென்றதும் அவரையும் கட்சியின் துணைப் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் உள்ளிட்ட அவர் குடும்பத்தினரையும் கட்சியை விட்டே ஒதுக்கினார். பின்னர், அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஒ.பன்னீர்செல்வம், மூத்த நிர்வாகிகளான வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ்பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரையும் கட்சியை விட்டு பொதுக்குழு மூலம் நீக்கி, […]