மதுக் கடைகளில் இருந்து மட்டும் 22,000 கோடி ரூபாய்முறைகேடு செய்த ஊழல் பணம் மேலிடத்துக்கு சென்றுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தில் திருவண்ணாமலையில் பேசிய எடப்பாடி பழனிசாமி; தமிழகத்தில 6000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த மதுக் கடைகளில் நாள் ஒன்றுக்கு 1.50 கோடி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் […]

அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டோர்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” எழுச்சிப் பயணத்தில் வந்தவாசியில் பேசிய அவர், ஸ்டாலின் பாட்டுக்கு கடன் வாங்கி வைத்துவிட்டுப் போய்விடுவார், நாளை ஆட்சிக்கு வருபவர்கள் கடும் துன்பத்துக்கு ஆளாக வேண்டும். நாளை அதிமுக ஆட்சி வந்தால் நம்மளைத்தான் சொல்வாங்க. கடன் திருப்பி கட்டலைன்னா விடுவாங்களா? திருப்பிச் […]

தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர்.. தமிழக அரசு போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.. இதனால் தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர்.. எனினும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த […]

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.. அப்போது ரூ.1,427 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்திற்கு செய்யப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.. மேலும் பரம்பிக்குளம் ஆழியார் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி, மாவட்ட மைய நூலகம், ஊத்துக்குளியில் புதிய வெண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. […]