2024-2025 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு பதிவு செய்து வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 297 கோடி வழங்கி அரசாணை வெளியீடு. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளி வளர்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அல்லிகளின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 […]

விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கான ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த மூன்று நாள் இலவச பயிற்சியை தமிழக அரசு வழங்க உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் / சேவைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது. இதனை […]

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள கட்கா கிராமத்தில், வானில் இருந்து வயலில் மேகம் விழுவது போன்ற விசித்திரமான வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பருவநிலை மாறுபாடு காரணமாக இதுபோன்ற பல்வேறு இயற்கை நிகழ்வுகள் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விஞ்ஞானிகளும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவருகின்றனர். மிக அரிய நிகழ்வு என்ற போதிலும், இதுபோன்ற சில வீடியோக்கள் உண்மையா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில், உத்தரபிரதேச […]

திண்டுக்கல் சந்தையில் பூக்களின் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.  தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை உயர்வு, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பூவின் வரத்து அதிகரித்ததால், பல்வேறு வகை பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக திண்டுக்கல் சந்தையில் சம்பங்கி ரூ.30, குல்லைப்பூ ரூ.150, மல்லிகை ரூ.400க்கு விற்பனையாகிறது. முந்தைய வாரங்களில் மல்லிகை பூ ரூ.700 வரை […]

விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்ய சிறப்பு வசதியாக இணையதளம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் நலன் கருதி அவர்களது வருவாய் பெருக்கும் விதமாக தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை நல்ல விலைக்கு உரிய நேரத்தில் விற்பனை செய்ய சிறப்பு வசதியாக இணையத்தளம் உருவாக்கப்படும். இந்த இணையத்தளம் மூலம் கால்நடைகளில் சந்தை விலை நிலவரம் பல்வேறு சந்தைகளில் இருப்பு நிலவரம். உள்ளிட்டவை கால்நடை விவசாயிகளால் […]

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஜீன் 2025 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 20-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க […]

மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகும் குறுவைத் தொகுப்பு அறிவிக்காதது ஏன்…? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து  தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில்,  குறுவை சாகுபடிக்கான குறுவைத் தொகுப்புத் திட்டம் இன்று வரை அறிவிக்கப்படவில்லை; நெல்லுக்கு முதலமைச்சர் அறிவித்துள்ள கொள்முதல் விலையும்  உழவர்களுக்கு  ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.  […]

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் 11.06.2025 மற்றும் 12.06.2025 ஆகிய நாள்களில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக இன்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 11 கி.மீ. ரோடு ஷோவில் பங்கேற்கிறார். 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்து வைக்கிறார். முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக சேலத்துக்கு இன்று வருகிறார். காலை 10 […]

நாட்டிலுள்ள நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசு கொண்டுவந்த திட்டம்தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிம் கிசான்) திட்டம். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகளாக இந்தப் பணம் பிரித்து வழங்கப்படுகிறது. இந்தப் பணத்தை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே அரசு […]

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் “உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” திட்டத்தினை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையில் விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதோடு, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை உழவர் நலத்துறை […]