நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் நேபாளம்-சீனா எல்லை பாலம் அடித்து செல்லப்பட்டதில் இருநாடுகளை சேர்ந்தவர்களில் 8 பேர் பலியாகியுள்ளதாகவும், 30க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நம் அண்டை நாடான சீனாவில் பலத்த மழை பெய்து வருகிறது. நேபாளத்தை ஒட்டியுள்ள சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஜிகாசே மாகாணத்தின் கிராங்க் துறைமுகம் அருகே, கட்டுமானப் பணி நடந்தது. அப்போது அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 17 பேர் […]
Flood
இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பால் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கூட்டுறவு வங்கி மூழ்கியுள்ளது. இதனால், அடகு வைக்கப்பட்ட நகைகள், பணம், ஆவணங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலத்தை கனமழை புரட்டி போட்டது. கனமழை மட்டும் பெய்யவில்லை. மேகவெடிப்பு, நிலச்சரிவும் ஏற்பட்டது. குறிப்பாக மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. […]
ஜூலை 5-ம் தேதி மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என்று புதிய பாபா வங்கா கணித்துள்ளார். தனது கனவுகள் மூலம் எதிர்காலத்தைப் பார்க்க முடியும் என்று கூறும் ஜப்பானிய பெண் ரியோ டாட்சுகி தனது “தி ஃபியூச்சர் ஐ சா” என்ற புத்தகத்தில், பல்வேறு பகீர் கணிப்புகளை செய்துள்ளார். அவரது பல கணிப்புகள் 100% துல்லியமாக நிரூபிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் இப்போது அதிகமான மக்கள் அவரது கூற்றுகளை உன்னிப்பாகக் கவனித்து […]
டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். யமுனை நதிக்கரையில் வசிக்கும் பல ஏழைக் குடும்பங்கள் வெள்ளத்தில் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் என […]
கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் பேரிடர் நிவாரண அமைப்பு, தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த் துறை, பொதுமக்கள் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவது எப்படி ? என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அந்த வகையில் பத்தனம்திட்டா அருகே உள்ள கல்லுப்பாறை பகுதியில் உள்ள ஆற்றில் நேற்று நிகழ்ச்சி நடந்தது. நீச்சல் தெரிந்த 4 பேர் ஒத்திகையில் பங்கேற்க அங்கு அழைத்து வரப்பட்டனர். இதில் பினு சோமன் (35) […]
பிலிப்பைன்ஸில் நேற்று பெய்த கனமழை வெள்ளத்தில் சுமார் 46,000 பேர் சிக்கித்தவித்தனர். காலநிலை மாற்றம் காரணமாகவே உலகம் முழுவதும் கடும் வறட்சி, காலம் தவறிய மழை, அதி கனமழை, வெள்ளம் ஆகியன ஏற்படுகின்றன. அதற்கு பிலிப்பைன்ஸும் விதிவிலக்கல்ல. பிலிப்பைன்ஸில் நேற்று கொட்டித்தீர்த்த கனமழையால், பிலிப்பைன்ஸின் மிண்டானோ தெற்குப் பகுதிகள், ஓசாமிஸ், கிளாரின், உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சாலைகளில் மார்பளவுக்கு மேல் செல்லும் வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. வெள்ள […]
அருணாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஸ்கார்பியோ கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வைரலாகியுள்ளது. அருணாச்சலபிரதேசத்தில் சுபன்சிரி மாவட்டத்தில் சிபுட்டா கிராமத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எப்படியாவது கடந்து சென்றுவிடலாம் என நினைத்த ஓட்டுனர் ஸ்கார்பியோ காரை ஓட்டிச்சென்றார். பாதி தூரம் சென்றதும் அந்த கார் நடுவில் சிக்கிக் கொண்டது. […]