காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் […]
gaza
காசா போர் மேலும் மேலும் பயங்கரமாகி வருகிறது. காசாவின் தெற்குப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25, 2025) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தின. சிவில் பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீதான தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) மற்றும் ராய்ட்டர்ஸ் ஆகியவற்றின் பத்திரிகையாளர்கள் […]
Five Al Jazeera journalists were killed in an Israeli attack on Gaza. The Israeli defense forces have accused one of them of being a ‘Hamas terrorist’.
இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையேயான போர் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலால், காசாவில் பஞ்ச சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அதிகரித்து வரும் பசி பிரச்சனையை சமாளிக்க, இஸ்ரேல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காசாவின் மூன்று பகுதிகளில் தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம் செய்வதாகவும், அங்குள்ள ஏழைகள் மற்றும் பட்டினியால் வாடும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை […]
மனிதாபிமான சட்டங்களை மீறும் இஸ்ரேலின் நடவடிக்கைகளால், காசாவை சூழ்ந்துள்ள பசிப்பிணி, மனதை ரணமாக்கும் விதமாக பிறந்த ஒருவாரமே ஆன குழந்தை பட்டினியால் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் அழுகுரல்கள், ஓயாமல் ஒலிக்கும் பசிக்குரல்கள், ஒரு தாய்க்கு ஒரு துண்டு ரொட்டி கிடைத்தால், அதை குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுத்து, மீதமுள்ளதை அடுத்த நாளைக்கு சேமித்து வைத்துக்கொள்ளும் நிலை. காசாவில் நிலவும் பசிப்பிணியின் கொடுமை காட்சிகளை பார்க்கும்போது மனதை ரணமாக்குகிறது. […]
காசாவில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய புதிய வான்வழித் தாக்குதலில் கிட்டத்தட்ட 100 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 58,000 ஐத் தாண்டியுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. பாலஸ்தீன சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, காசா நகர சந்தையில் நடந்த வான்வழித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் உதவி விநியோக இடங்களில் பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைத்ததாக காசா அரசாங்க ஊடக அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், இஸ்ரேலிய […]
காசாவில் உணவு மற்றும் தண்ணீரை சேகரிக்க முயற்சிக்கும்போதும் 798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையிலான போர் மிகவும் கொடூரமாக மாறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான போரில் இதுவரை காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். ஆனால், காசாவில் உள்ள மக்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் மட்டுமல்ல, உணவு மற்றும் தண்ணீரை சேகரிக்க முயற்சிக்கும்போதும் ஏராளமான மக்கள் […]
காசாவில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் 85 பேர் பலியாகினர். காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தி வருகிறது. மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் பிற நெரிசலான இடங்கள் நேற்று கடுமையான குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டன. காசா நகரின் கடற்கரையில் நடந்த ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். மத்திய காசாவில் உள்ள அல்-அக்ஸா […]
இஸ்ரேல் – ஈரான் இடையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கில் மற்றொரு போர் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்து வந்த ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் இன்று முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். டிரம்பின் இந்த அறிவிப்பை முதலில் ஏற்க மறுத்த ஈரான், சிறிது நேரத்திலேயே போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தது. இதை தொடர்ந்து […]
காசா மீதான இஸ்ரேலின் தொடர்ந்து நடைபெறும் வான்வழித் தாக்குதலும் துப்பாக்கிச் சூடும் உயிரிழப்புகளை தினசரி பெருக்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காசா முழுவதும் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர், உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து சுமார் ஒரு ஆண்டுக்குப்பிறகு, 2024 ஜனவரியில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் முயற்சியால் போர் […]