fbpx

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி நாளில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கவுள்ளன. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை பகுதியில், 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வுக்கு செல்வதற்காக, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.

வாணியம்பாடி வழியாக …

வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்து நிற்காமல் சென்றதால், தேர்வுக்காக காத்திருந்த 12-ம் வகுப்பு மாணவி அபாயகரமான முறையில் பேருந்தை நோக்கி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி நாளில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் …

தென்காசி சுரண்டை பகுதியில் அரசு பேருந்து நடத்துனரை கல்லூரி மாணவர்கள் தாக்கியதாக கூறி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து சுரண்டை அரசு கல்லூரி வழியாக சுரண்டை பேருந்து நிலையத்திற்கு ஒரு அரசு பேருந்து வந்தது. அப்போது மாணவர்கள் படியில் நிற்க கூடாது என நடத்துனர் கண்டித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடத்துனரை …

மாநகர், புறநகர் பேருந்துகளில் ஏசி தவிர்த்து காவலர்கள் பணி செய்யும் மாவட்டத்துக்குள் பயணிக்க இலவச பயண அட்டை வழங்கப்பட உள்ளது.

தமிழக காவல் துறையில் டிஜிபி தலைமையில் சட்டம் , ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, எஸ்பிக்கள், டிஎஸ்பி, ஆய்வாளர்கள், காவலர்கள் என, சுமார் 1,21,500க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களில் …

உளுந்தூர் பேட்டை அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து மீது பள்ளி மாணவர்கள் கல் எறிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே, உள்ள கிராமத்தில் அரசு பேருந்து நிற்காமல் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின. இதுகுறித்து பல …

பெரம்பலூர் தனியார் பல்கலைக் கழக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். இந்த விழாவில் 2 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.இதனைத் தொடர்ந்து, அமைச்சா் சிவசங்கர் செய்தியாளா்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசுகையில், ”அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் …

சென்னையில் இருந்து, கும்பகோணம் நோக்கி ,பயணித்துக் கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, நள்ளிரவு நேரத்தில், கடலூர் மாவட்டம் ,சேத்தியாத்தோப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, பாலத்தின் சுற்றுப்புற சுவரை இடித்துக் கொண்டு, அந்தரத்தில் தொங்கியதால், அதிலிருந்த பயணிகள், பெரும் கூச்சலிட்டனர். இதனால், அந்த பகுதி …

ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனங்களை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் முன்னறிவிப்பில்லா போராட்டத்தை நடத்தினர். இதனையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிஐடியூ, அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை தேர்வு செய்யும் விவகாரம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனையடுத்து சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜூன் …

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். அரசு போக்குவரத்துத்துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை …

அரசு போக்குவரத்து துறை தனியார் மயமாக்குதலை கண்டித்து போக்குவரத்துறை ஊழியர்கள் திடீரென பேருந்துகளை பணிமனைக்கு திருப்பி எடுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் 400 ஒப்பந்த ஒட்டுனர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்திருந்தது. தமிழ்நாட்டில் உள்ள 12 பணிமனைகளில் பல்வேறு வழித்தடத்தில் 400 ஒப்பந்த ஒட்டுனர்கள் நியமிக்க திட்டமிடபட்டிருந்தது.

இந்நிலையில், …