திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மர்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சில இடங்களில் இயங்கி வரும் பள்ளிகளில் போதுமான இடவசதி இல்லை, அடிப்படை வசதி இல்லை, சுத்தம் இல்லை, சரியான கட்டிடம் இல்லை என பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகளுக்கு பள்ளிகல்வி துறை …
government school
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய , நகராட்சி,அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. நம்பள்ளிகளில் 2023-24ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க …
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குநர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2022-23 ஆம் கல்வி ஆண்டில் பொது மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் …
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேவைகளை நிறைவேற்ற முன்னாள் மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் அணுக வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை தனது அறிவிப்பில்; தலைமையாசிரியராகிய உங்களாலும், பணிபுரியும் ஆசிரியர்களாலும் தான் உங்கள் பள்ளி இயங்குகிறது. நீங்களே உங்கள் பள்ளியின் தூணாக இருக்கிறீர்கள். உங்கள் பள்ளியில் நேற்றைய மாணவர்கள் இறுதியாண்டு முடித்துச் …
நாட்டில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் பள்ளி குழந்தைகளுக்கு நேரிடும் இது போன்ற அவல நிலையை நினைத்தால் நெஞ்சம் பதை பதைக்கிறது.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில் …
“புதுமைப் பெண்” இரண்டாம் கட்ட திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் , அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் “புதுமைப் பெண்” இரண்டாம் கட்ட திட்டத்தை முதல்வர் …
அரசு பள்ளியில் காலை உணவு திட்டத்தில் வாழைப்பழம் கொடுக்கும் இன்று முதல் தொடங்க உள்ளது.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முன்னோடி திட்டம் இன்று முதல் கேரள மாநிலம் கொச்சி மாநகராட்சியால் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. காலை உணவில் ஆப்பம், …
சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு கிடையாது அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் தற்போது 43,190 பள்ளி சத்துணவு மையங்களில் சுமார் 46.00 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில், தற்போது சத்துணவு மையங்களில் உள்ள …
தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் என்னும் திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் 3,095 உயர்நிலைப் பள்ளிகள், 3,123 மேல்நிலைப் பள்ளிகள், 6,992 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 13,210 அரசு பள்ளிகளில் இந்த வானவில் மன்றம் தொடங்கப்பட …
அரசுப்பள்ளிகளில் 6-ம் முதல் 9-ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப்பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் கலைத்திருவிழா நடத்தப்படும் …