குஜராத் மாநிலத்தில் நீரில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வாபியில் உள்ள கே.பி.எஸ். கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்கள், நேற்று மாலை வல்சாத் மாவட்டத்தில் உள்ள கோலி நதி உருவாகும் இடமான பாண்டவ் குண்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, அதில் ஒரு மாணவர் குளிப்பதற்காக ஆற்றில் குதித்துள்ளார். …